அது என் குச்சி டப்பா..

8 3 37
                                    

......... ஏழாம் தெருவில் தொடங்கி அருகில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதி வரையில் நகர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேகமலையின் இந்த ஒரு பகுதியில் மட்டும் தீடீரென உருவாகிய சூறைகாற்றால் நேற்று பகல் முதல் தெரு முழுவதும் பாழடைந்த தோற்றத்தில் காணப்பட்ட நிலையில் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சேதாரமடைந்த மின் கம்பங்கள் மற்றும் சாலையில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றி ஒரே நாளில் தெருவை பழைய நிலைக்குக் கொண்டுவர உதவி செய்திருப்பதாகவும் தெரு மக்களும் அவர்களுக்கு உதவிகரம் நீட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மலை பகுதிகளில் ஏற்படும் இதுபோலான தீடீர் சூழல் மாற்றங்களுக்கான காரணங்களை புவியியல் வல்லுனர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் இது போன்ற அண்மை செய்திகளுக்காக....

'நியூஸ்ல வர்ற அளவுக்கு சம்பவம் பண்ணி வச்சுருக்கியே டா ரக்ஷவா' என்னும் மைண்ட் வாய்சுடன் டிவியை குறுகுறுவென பார்த்தபடியே சாக்ஸ் போட்டு பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தான், ரக்ஷவன்.

"ரக்ஷவ், எல்லா திங்க்ஸயும் எடுத்துட்டல்ல? அப்றம் போற வழில வந்து பென் மறந்துட்டேன் இங்க் ஊத்த மறந்துட்டேன்னு சொல்லக் கூடாது." தன் கை பையில் அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டே வந்த பார்கவி அம்மாவின் சொல்லை கேட்ட பின்பே தலையில் இரு கையையும் வைத்தவன், " மயூ, இங்க் பாட்டில் எடுத்துட்டு வாயேன்" என வீட்டுக்குள் குரல் கொடுக்க, "அதானே பாத்தேன் என்னடா ஆளுக்கு முந்தி கெளம்பீட்டானேன்னு" அவனுக்கு கேட்கும்படியே முணுமுணுத்தவாறு அவனருகில் வந்து நின்ற பார்கவி அம்மா, தன் மொபைலை கையில் எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தார்.

"இந்தா.. உன் பென்ல இங்க் பில் பண்ணியே எடுத்துட்டு வந்துட்டேன்" பரிட்சைக்கு தேவையான தன் உடைமைகளுடன் சேர்த்து அவனுடையதையும் எடுத்துக்கொண்டு வந்த மயூரி, தன்னுடைய ஷூ மற்றும் சாக்ஸை எடுத்துக்கொண்டு வாயிலுக்க நகர, ரக்ஷவை அழைத்துக்கொண்டு அவள் பின்னேயே நடந்த பார்கவி அம்மா, "என்னடா ரக்ஷவ், உன் அம்மாவுக்கு கால் ரீச் ஆகவே மாட்டுது.. நேத்துல இருந்து ட்ரை பண்ணுறேன்" என சொன்னது தான் தாமதம், ரக்ஷவ், மயூவுடன் சேர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற மூவரும் கூட திகைத்து நின்ற நேரம் நொடிக்கணக்கில் நிலமையை தன் கைவசத்தில் கச்சிதமாக எடுத்துக்கொண்டான், அர்ஜுன்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now