மாற்ற முடியாத நிஜம்

12 3 22
                                    

கண்ணீரும் கலங்கிய குரலுமாக தன் மனதின் சோகங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தான், ரக்ஷவன். அவனின் உடைந்துப்போன நிலையை கண்டபின் அதற்குமேல் பேசிட மித்ரா, மயூரி இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை, அவனை சமாதானம் செய்யுமாறு தேவயாசினியிடம் கண்கலாலேயே கெஞ்சினார்கள் இருவரும். 

மகனின் மனதில் உள்ளவைகள் இப்போதாவது முழுமையாக வெளிவரட்டும் என அமைதியாய் நின்றிருந்த தேவயாசினி, சகோதரிகளின் பார்வை-கெஞ்சலால் தன் மகனின் அருகில் சென்று அவன் முகம் ஏந்தினாள்.

"ரக்ஷவ்.." அன்னையின் அழைப்புக்குத் தன் வறண்ட விழிகளால் அவன் கவனம் கொடுக்க.. பார்வையாலேயே மகனை சமாதானம் செய்தவள், அவனை தன்னோடு சேர்த்தனைத்து முதுகில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தாள். அன்னையின் அரவனைப்பால், அடக்கிவைத்த சோகங்களை கண்ணீராக வெளியேற்றினான் அவன். 

நிமிடங்கள் கடந்ததும் மகனின் விசும்பல்கள் ஓய்ந்ததும், தேவயாசினி, அவனை தாண்டிச் சென்று அந்த அறையில் இருந்த புத்தக அலமாரியில் இருந்த ஒரு பழைய கிங்-சைஸ் நோட் ஒன்றினை எடுத்து வந்து மகனிடம் நீட்டினார். "இந்தா, ரக்ஷவ். இது உன் அப்பாவோடது. அவரு நியாபகமா இது மட்டும்தான் என் கிட்ட இருக்கு. இனி, நீயே வச்சுக்கோ." அந்த நோட்டை மகனிடம் நீட்ட.. அவன், கண்களை துடைத்துக்கொண்டே அதை வாங்கக் கையை நீட்டிய நொடி, "ஆனா- " தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள், தேவயாசினி. அன்னையை பாவமாக நோக்கினான், மகன்.

"ஆனா, இப்போ நீ கண்ண மூடிட்டு இந்த நோட்ல ஒரு பக்கத்த எடுக்கனும்.. அதுல உன் அப்பா என்ன சொல்லிருக்காரோ அதுபடி நீ இப்போ நடந்துக்கணும். எந்த சாக்கு போக்கும் சொல்லக் கூடாது. சரியா?" ஒரு ஒப்பந்தத்துடன், மீண்டும் அந்த நோட்டை நீட்ட... அவனுக்கு இருந்த ஆவலில் சரியென வேகமாகத் தலையசைத்தபடி அதை கையில் வாங்கினான். அம்மாவிடம் சொன்னது போலவே கண்களை மூடிக்கொண்டு தந்தையின் அந்த நோட்டை விரித்தான், ரக்ஷவன்.


இரண்டு பாதைகள்..

ஒன்று, நினைத்தது.. இன்னொன்று, கிடைத்தது..

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Unde poveștirile trăiesc. Descoperă acum