கிச்சன் ஜன்னல் வழியாக எகிறி குதித்துத் தன் அண்ணன் மற்றும் தீராவிடமிருந்து தப்பி ஓடியிருந்த இளவரசிகள் இருவரும் தோளோடு தோளாகக் கை போட்டுக்கொண்டு, அந்த ஊரின் எல்லையை அடையும் சாலை வழியாக நடந்துக் கொண்டிருந்தார்கள்.
"நம்ம மெமரியவே க்ளியர் பண்ணுற அளவுக்கு இந்த தீராக்கு தைரியம் இருந்துருக்கு பாரேன் ம்மூ!"
"ம்ம்! எல்லாத்துக்கும் சேத்துவச்சு என்னைகாச்சும் செஞ்சு விட்டுருவோம் அவள" சகோதரியின் பார்ட்-டைம் புலம்பலுக்கு பதில் கொடுத்தாள், ரக்ஷா.
"ம்ம். செய்வோம், கண்டிப்பா" என்னும்போதே அவர்கள் பார்க்க நினைத்திருந்த அவ்விடத்தை அடைந்திருந்தார்கள், ரட்சக ராஜ்ய இளவரசிகள் இருவரும். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ரட்சகனை காப்பதற்கு அவர்களால் போடப்பட்ட எல்லை கவசம் இருக்கும் இடம்தான் அது. அன்றைய நினைவுகள் எதுவும் அவர்கள் நினைவில் இல்லாமல் இருந்தாலும், நேற்று, தீரா சொல்லியதை கேட்டதும் அவர்களது மாயத்தின் வலிமையை காண இங்கு வந்திருக்கிறார்கள் இப்போது.
"இன்னும் இருக்கு, ம்மூ" அவர்களின் பார்வைக்கு மட்டுமே தெரியும்படியாக, மிக மெல்லியதாக இருக்கும் அந்த கண்ணாடித் திரையை பார்த்துக்கொண்டே ரக்ஷா சொல்ல, "ஆமா, ம்மூ! ஆனா, ஸ்ட்ராங்கா இல்ல" தங்கையின் சொல்லை பாதி ஆமோதித்தாள், மாயா.
"மறுபடியும் போட முடியுமா?"
"ம்ம். இது முழுசா உடையவும் தான் போடலாம்."
"சரியா பதினாலு வருஷம் ஆகும்ல, ஒரு ஸ்ட்ராங்கான மாயம் ஒடைய!"
"ம்ம்"
"கரக்டா பதினாலு வருஷம்னா... அவ சொன்ன கணக்குபடி மிட்-நைட் ஆகும் போல,"
"ஹான், அதுவரையும் நாம இங்கேயே- அம்மு! நீ அத பாத்தியா?" சட்டென மாயாவின் குரல் மாற்றம்கொள்ள... அவள் பார்வை, கவசத்திற்கு அப்புறமாக ஒரு வெற்றிடத்தில் பதிந்திருந்தது.
"நிழல்தேச இளவரசன் தானே அது!?" மாயாவின் அதே அதிர்ச்சி ரக்ஷாவின் குரலிலும் தென்பட்டது. அதுவே போதும், சட்டென கரும்புகைக்குள் மறைந்தவனை அவளும் பார்த்திருக்கிறாள் என்பது புரிந்தது அவள் சகோதரிக்கு.
YOU ARE READING
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poetryகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...