ஆப்ரேஷன் மெடிட்டேஷன்

15 6 8
                                    

பார்கவி அம்மா மதிய உணவு சமைப்பதற்காக கிச்சனில் வைத்து மீன் கழுவிக் கொண்டிருக்கும் சைடு கேப்பில், படிப்புக்கு பை பை சொல்லிவிட்டு வீட்டின் நடு கூடத்தில் மினி வட்ட மேஜை மாநாடு ஒன்றை கூட்டிவிட்டான் அர்ஜுன். இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதை பார்பதற்காக அவர்களுக்கு அருகிலேயே இருக்கும் சோஃபாவில் அட்டினக்கால் போட்டுக்கொண்டு படுத்திருந்த தீரா, இன்னுமும் இன்விசிபில் மோடில் தான் இருந்தாள்.

"இதுதான் உன் மொக்க பிளானாக்கும்." காலையில் ரக்ஷவுடன் இணைந்து போட்ட திட்டதுக்கு ஆப்ரேஷன் மெடிடேஷன் என ஒரு பெயரும் வைத்து அதை மிகத் தீவிரமாக விளக்கி முடித்தத் தன் தம்பியை நோக்கி ஒரு பார்வை பார்த்தான், ஹர்ஷன்.

"மொக்கையா இருந்தாலும் அவன் சொல்றது சரின்னு தான் எனக்கு தோணுது.." மயூரி, அர்ஜுனுக்கு சாதகமாக பேசிட, அதே நேரம், "ஆமா. இந்த கத்தியும் மின்னுச்சு, காலைல அவன் இத சொல்லும்போது." ரக்ஷவும் உடன் சேர்ந்துக்கொண்டான். தனக்கு சாதகமாக பேச இருவர் இருக்கிறார்களே என்னும் திமிர் அவன் கண்ணில் தெரியத் தன் சகோதரனை பார்த்து வெற்றிப் புன்னகை சிந்தினான், அர்ஜுன்.

"என்னடா ரக்ஷவ், லூசு மாறி பேசுற. கத்தி மின்னுச்சுன்னா கரக்ட்டா இருக்குமா? மொதல்ல அது ஏன் உன் கைய புடிச்சுட்டு இருக்குன்னே நமக்கு தெரில."

"ஆனா மெடிடேஷன் பண்ணுறது மைன்ட்க்கு நல்லது தானே? மைன்ட் ஸ்டேபிலா இருந்தா நம்மல நாமலே ஈஸியா கன்ட்ரோல் பண்ண முடியும் தானே? கோவில்ல வந்தவரு சொன்ன மாதிரி அப்டி கூட ரக்ஷவ் ரெடி ஆக வாய்பிருக்கு தானே?" மயூரி சொல்ல.. ஹர்சனின் பார்வை, இதுவரை எதுவும் சொல்லாமல் இருக்கும் மித்ராவை நோக்கியது. அதன் பொருளை புரிந்துக் கொண்டவள், "எதுவுமே பண்ணாம இருக்குறதுக்கு எதையாச்சும் ட்ரை பண்ணி பாக்கலாம்ல?" அர்ஜுனின் யோசனைக்கே பரிந்து பேசினாள்.

"அஹ்! எனக்கு சப்போர்ட் பண்ணா ஆளு கெடச்சுருச்சு." தன் சகோதரன் தோளை பிடித்துத் தொங்கியபடியே அவனிட்டக் கூச்சல், கிச்சனை அடைந்துவிட.. "ஏய்.. படிக்காம வெளையாடிட்டு இருக்கீங்களா டா?" பார்கவி அம்மாவின் குரல் இவர்களை அடைந்த அடுத்த நொடி சிதறி ஓடிய ரக்ஷவும் மயூவும் தத்தம் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஆளுக்கு ஒரு மூலையில் சென்று அமர்ந்தபடி, "இல்ல ம்மா" "படிச்சுட்டு தான் இருக்கோம் ம்மா" சமத்து பிள்ளைகள் போல பதில் கொடுப்பதை விழித்துப் பார்த்தார்கள் சகோதரர்கள் இருவரும். "அம்மா வாய்ஸ்க்கு இது தான் பவர்" வாயை மூடி சிரித்துக்கொண்டே விளக்கம் கொடுத்தாள், மித்ரா.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now