சாகசம் - (முன்னோட்டம்)

167 7 28
                                    

"அம்மா, எப்பவும் நீ என் கூடவே இருப்பன்னு சொல்லு."

"நான் எங்க போனாலும் உன் கூடவே தான் இருப்பேன், ராஜா. அது உனக்கே தெரியும். அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற?"

"டெய்லி வேலைக்கு போறேன்னு காலையில போறவ தான், நைட் தூங்குனதுக்கு அப்பறம் தா வர்ர. ஒரே ஒருநாள் தா உன் கூட இருக்க முடியுது. அப்புறம் எப்படி நீ என் கூடவே எப்பவுமே இருக்கறதா சொல்லலாம்?"

"நமக்குன்னு வேற யாரும் இல்ல டா. அப்டி இருக்கும்போது நா வேலைக்கு போய்தானே ஆகணும்? வேற வழி இல்ல ராஜா, எல்லாம் நீ வளந்து வேலைக்கு போற வரைக்கும் தான். அதுக்கப்பறம் நீ என்ன ராணி மாதிரி பாத்துக்கப்போற... நான் வீட்டுலயே இருக்க போறேன்..."

"கண்டிப்பா, ம்மா. எல்லாம் நா வேலைக்கு போற வர மட்டும்தான். அப்பறம், நாம நம்மளோட சொந்த ஊருக்கே போய்ரலாம். அதுக்கப்பறம் நீயே வேலைக்கு போறேன்னு சொன்னாலும் நான் விடமாட்டேன். நம்ம ஊருல ஒரு பெரிய அரண்மனைய வாங்கலாம். அங்க நான் தான் ராஜா நீ தான் ராஜமாதா. எப்படி என்னோட பிளான்?"

"ஆஹா! ராஐ தந்திரம்!! ஹாஹாஹா..."

அன்னையே தன் உலகென வாழும் இவன் வாழ்வில் வரும் ஒரு புதிய திருப்பம்...

***

"மகாராணி, ரட்சகன் ஆதிலோகத்திற்கு வரவளிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. ஆனால், அவனது சக்திகளை இன்னும் அவன் உணர்ந்து கொள்ளவில்லையே? என்ன செய்வது மகாராணி?"

"அவனை குறித்து அவன் உணர்ந்தால் மாத்திரமே ரட்சகனால் ஆதிலோகம் வரவளிக்கக் கூடும். ஆனால்.... .. விதியின் எண்ணம் என்னவோ?"

"மகாராணி, அவ கவசங்கள் மெல்ல மெல்ல வலுவிழக்கின்றன. இன்னும் இரு தினம் கடப்பின் அவன் கவசங்கள் அவனை நீங்கிடும். எதிரிகளும் அவனை கண்டறிந்து விடுவார்கள்.."

"ஹ்ம் அதற்குள் ரட்சகனுக்கு தன்னிலையை உணர்ந்திடக் கூடுமா தீரா?"

"ம்ம்.. இயன்றளவு முயற்சிக்கின்றேன் மகாராணி. ஆனால், என்னவாயினும் சரி, எதிரிகள் அவனை நெருங்கிடாமல் ரட்சிக்கும் பொறுப்பு எனதாகும். எச்சூழலிலும் அதனை நான் மறவேன்."

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now