க்யூட் ரட்சகன்!

12 3 10
                                    

"ஹேப்பி பர்த்-டே டூ மீ! ஹேப்பி பர்த்-டே டூ மீ!" மெல்லிய குரலில் தனக்குத்தானே பாடியபடியே தன் கையில் இருக்கும் பர்ஃப்யூம் பாட்டிலை மேஜையில் வைத்த ரக்ஷவன், தன் தாய் தனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கும் ஆடையை அணிந்துக்கொண்டு கண்ணாடி முன் நின்றுத் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தான். "சும்மா சொல்லக் கூடாது, அம்மா செலக்ஷன் எல்லாமே அழகுதான். ச்சோ கியூட் டா நீ" கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை கொஞ்சிக் கொண்டே, "எங்கருந்து தான் இவ்வளவு அழகு வந்துச்சோ! ப்ப்பாஹ்! என்ன ஒரு அழகு. என்  கண்ணே பட்டுடும் போல" தனக்குத்தானே திருஷ்டி சுற்றிக்கொண்டான் அவன்.

வழக்கத்திற்கு மேலான உற்சாகத்தில் இருக்கிறது இவன் முகம். முதல் முறையாக, இன்றைய பிறந்தநாளில்தான் உண்மையான பிறந்தநாள்-குழந்தை கலையில் இருக்கிறான் இவன். அனைத்திற்கும் காரணம், இன்றைய நாளின் முதல் பரிசாக இவனுக்குக் கிடைத்திருக்கும் அவன் தந்தையின் டைரி தான். என்றும், காலையில் எழுவதற்குத் தன் அன்னையின் தரிசனத்தை மட்டுமே தேடுபவன், இன்று, அன்னையுடன் சேர்த்து தந்தையின் டைரியையும் தேடினான். மகனின் இந்த புதிய மாற்றத்தை கண்டு தேவயாசினிக்கு அலாதி மகிழ்ச்சி! கடந்த எட்டு பிறந்தநாள்களாக தன்னை தானே குறைபட்டுக்கொண்டு கலையிழந்துக் காணப்பட்ட மகன், இன்று உற்சாகத்தின் ஒரு படி மேலே சென்று நிற்பதை காண்கையில் சிறு நிம்மதி துளிர்த்திருந்தது, அந்த தாயின் மனதில்.

மகனை எழுப்பி, கிளம்பும்படி கூறிவிட்டு அவனுக்கு இனிப்பு வகைகளை தயார் செய்து முடித்திருந்த தேவயாசினி, கையில் பாயாசக் கின்னத்துடனும் மனதில் ஆழ்ந்த யோசனையுடனும் ஹாலில் அமர்ந்திருக்கையில் அவளின் யோசனையை கலைக்கும்படியாக சிணுங்கியது, அவளின் அழைபேசி. அதை எடுத்துக் காதில் வைக்கும்முன், திரையில் ஒளிர்ந்தத் தன் அண்ணியின் பெயரை கண்டாள், அவள்.

"ஹலோ, அண்ணி,"

"தேவா...." தேவயாசினியின் சொல்லுக்கு, முழுதாக ஐந்து நொடிகள் கடந்து ஒலித்தது பதில் குரல். ஒரு ஆணின் குரல்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Donde viven las historias. Descúbrelo ahora