ரக்ஷவன் வீட்டுக்கு வெளிப்புறத்தில் மறைவாக இருக்கும் ஒரு மரத்தின் பின்னால் மறைந்த நிலையில், "நான் என்ன சொன்னேனோ அத மட்டும் செய்" அதிகம் சத்தம் வராமல் தன் மொபைலுக்குள் கத்திக் கொண்டிருந்தாள், தீரா.
"ஏன்டி, நாங்க அங்க வரமுடியாதுன்னு சொன்னது ஒரு குத்தமா?" வனதேசத்தின் வழியாக நடந்துக் கொண்டிருந்த இளவரசிகள், தங்களின் மொபைலை ஸ்பீக்கரில் போட்ட நிலையில் தீராவின் கட்டளைக்கு நொந்துக்கொள்ள, "இங்க வந்து தான் ஹெல்ப் பண்ண மாட்டுறீங்க.. அங்கேயே இருந்தாச்சும் ஏதாச்சும் செஞ்சு தொலைங்களேன்," அலுத்துக் கொண்டாள், தீரா.
"இப்போ என்ன உனக்கு? நீ அனுப்புன ஃபோட்டோ பத்தி நுவழி பாட்டி கிட்ட கேட்டு சொல்லணும். அவ்ளோ தானே கேட்டுத் தொலையுறோம். வை ஃபோன"
"ஹான். அபி, மாமா-" ரக்ஷாவின் சரவெடி பதிலை தொடர்ந்து அடுத்த வார்த்தையை சொல்ல முனைந்த தீரா அதை சொல்லும் முன்பே அழைப்பு தூண்டிக்கபட்ட சத்தம் கேட்டதும், "-எப்டி இருக்காங்கன்னு தானே கேக்க வந்தேன்... அதுக்குள்ள அப்டி என்ன அவசரம் இவளுங்களுக்கு?" பல்லை கடித்துக்கொண்டு மொபைலை நோக்கிக் கத்தி முடித்தவள், நிலவை நோக்கி கண்ணீர் சிந்தி கொண்டிருக்கும் ரட்சகனை பாவமாக பார்த்தாள்.
கஷ்டம் தான். எல்லாமுமாக இருந்த உறவு ஒரே நொடியில் தன்னை பிரிந்த வேதனையை சுமந்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், என்னவென்றே தெரியாத மிகப்பெரிய பொறுப்பு ஒன்று கைக்கு வந்தால் இந்த பதினாலு வயது சிறுவன் என்னதான் செய்ய முடியும்?
தானாக முன்வந்து அனைத்தையும் அவனுக்குப் புரியவைக்கதான் காத்துக் கொண்டிருக்கிறாள், தீரா. ஆனால், என்னதான் அவள் உதவுவதற்கு முடிவெடுத்திருந்தாலும் ரட்சகனின் திறன்களை அவன் தனி ஒருவனாக நின்றுதான் விழிக்கச் செய்தாக வேண்டும். அதுதான் அவன் சக்திகளை அவனே உணர்வாதரக்கான முறையான வழி. அப்போதுதான் அவனுக்கான சரியான பாடங்களை கற்பிக்க முடியும்.
அவனுக்கு முன்னால் சென்று நின்று அனைத்தையும் விளக்கமாகச் சொல்லிவிட்டால் அவன் மனநிலை என்னவாகுமோ? எதிரிகளின் மீதான அவன் பார்வை எப்படி மாறுமோ? அதனால் அவன் சக்திகள் விழிப்பத்தில் தடைகள் வருமோ என்றெல்லாம் நினைத்துதான் அவள் விலகியே நின்றது.. அவன் சக்திகள் விழிப்பதக்காகத்தான் அவள் இத்தனை காலமும் காத்திருந்தது... ஆனால், என்ன செய்ய? காலம் கடந்தும் அவளின் காத்திருப்பு வெறும் காத்திருப்பாகவே தான் இருந்துக் கொண்டிருக்கிறது.
YOU ARE READING
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poetryகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...