வேட்டைக்காக!

16 4 27
                                    

"அம்மா கிட்டருந்து தப்பிக்கனும்ன்னு தானே அண்ணன கூட மாமா பொறுப்புல விட்டுட்டு இங்க வந்தோம், இப்போ மறுக்க ஊருக்குள்ள போயே ஆகணுமா?"

"அந்த எரும தீராகாக இல்லனாலும் நாம ரட்சகனுக்காக போய் தானே ஆகனும்?" தன் இரட்டை சகோதரியின் சிணுங்களைத் தொடர்ந்து கூறிய மாயா, தன் கையில் இருக்கும் மொபைலையே ஸூம் செய்தும் சுறுக்கியும் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் திரையில், இரட்சகன் மணிக்கட்டில் இருக்கும் வளையமும் அவனது குட்டியூண்டு வாளும் இருந்தது. 

சந்தேகமே வேண்டாம் இது தீரா செய்த காரியம்தான். அதற்கு காரணமும் உண்டு. நேற்று, ஒளிந்து நின்று ரகசியமாகக் கேட்ட ரட்சகனின் ஆத்ம-வாளை அவன் கைபற்றிய கதைதான் அது.

ஒருவரின்  ஆத்ம-வாள் அவரின் வலிமையை கொண்டே வீரியம் கொள்ளும் என்னும் பட்சத்தில் இரு லோகத்தை காக்கும் இரட்சகனின் வாள்... அவ்வளவு நேரமும் தன் இயல்பிலிருந்து மாறாத வாள் ஏன் அவனை அறிந்ததுமே இப்படி சிறியதாகியது என்னும் குழப்பம்தான் அவளுக்கு.

அதுபற்றி எதேனும் தகவல் கிடைக்கும் என்றால், இப்போதைக்கு, மொத்த ஆதிலோகத்துக்குமே மூத்தக் குடிமகளான இருக்கும் நுவழி பாட்டியிடம் மட்டுமே கிடைக்கும். மிகத் துல்லியமான காரணத்தை அவரால் மட்டும்தான் சொல்ல முடியும் . அதனால்தான் இப்போது நுவழி பாட்டியின் வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருக்கிறார்கள், ரட்சகராஜ்யத்தின் இரட்டை இளவரசிகள். 

✨✨✨

பொன் காலை கதிர்கள் உதிக்கும் மலை முகடுகளை நோக்கியபடி இருக்கும் அந்த பால்கனியில் வழக்கமாகத் தான் அமரும் மரபெஞ்சில் அமர்திருந்தான், ரக்ஷவன்.

எவ்வளவோ நடந்துவிட்டது.. அனைத்தையும் மெல்ல மெல்லதான் ஜீரணிக்க முடியும் என அவனுக்கு ஆறுதல்கூட சொல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள் அவனை சுற்றியிருக்கும் அனைவருமே.. அவர்களாலேயே இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே! நேற்று நடந்த திடீர் திருப்பத்தை.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now