ரட்சகராஜ்ய இளவரசிகள் இருவரும் நுவழி பாட்டியின் வீட்டுக் கதவை திறந்த சமயமே தன் கையில் இருக்கும் புத்தம் புதிய வாளை அதற்கான பிடியில் வைத்தபடி அவர்கள் இருவரையும் வரவேற்றார், அந்த ராஜ்யத்தின் மூத்தக்குடி.
"உள்ளே வாருங்கள், இளவரசிகளே"
"நாங்க பொறந்ததுல இருந்து தான் நீங்களும் இந்த வாள உருவாக்கீட்டு இருக்கீங்க, பாட்டி! நானும் பாக்குறேன், எப்போதான் இத செஞ்சு முடிக்குறீங்க... இந்த வாளுக்கான வீரன நாங்களும் எப்போதான் பாக்குறோம்ன்னு." வாளின் இரு முனைகளையும் தாங்கிக்கொண்டு நிற்கும் பிடியை நோக்கி நடந்தபடியே ரக்ஷா பேச.. இளவரசிக்கு வழி கொடுத்து நின்ற நுவழி பாட்டி,
"ஹஹஹ.. இன்றே இறுதிநாள், இளய இளவரசி. இன்றுடன் இந்த வாளானது முழுமை பெறவுள்ளது. இதற்கான வீரனும் விரைவில் வந்திடுவான்." சிறு சிரிப்புடன் பதில் கொடுத்தார்."அட.. இது நல்ல விஷயமாச்சே! அவர- ஸ்ஸ் ஆஹ்." வாளை தொட்டுப்பார்க்க கையை கொண்டு சென்றவளின் கவனம், பாட்டியின் திடீர்-அதிர்ச்சி தகவலால் திசைமாறிய நொடியே அவள் கையில் கீறல் ஏற்பட்டுவிட.. மாயாவின் கவனம் சட்டெனத் தன் சகோதரியை நோக்கிய சமயம் பாட்டியிடமிருந்து வந்தது புன்னகையுடனான பதில்.
"அவ்வளவுதான். நீங்களே இவ்வாளை முழுமைபெறச் செய்துவிட்டீர்கள், இளவரசி"
பாட்டியின் சொல்லுக்குப் பிறகே மாயாவிற்கு எல்லாம் புரிய... அவளும் லேசாக சிரித்தாள்.
அது ஒரு மாய வாள். எப்படி ஆத்ம வாள்கள் ஒருவரின் ஆத்ம சக்தியோடு கலந்திருக்கிறதோ அப்படியே இந்த மாய வாள்கள் எவரின் மாயத்துடனாவது இணைந்திருக்க வேண்டும். ஆனால், அதன் உரிமையாளர் பொதுவாக மாய சக்திகள் இல்லாதவர்களே. வாளுக்கு சக்தி கொடுக்க மட்டுமே மாயசக்தி கொண்ட ஒரு உரிமையாளரின் ரத்தம் தேவை. அத்தகைய வாளானது அதன் இரு உரிமையாளர்களை தவிர பிறரின் வீச்சுக்கு சரியான முறையில் ஈடுகொடுக்காது.
"ஹ்ம்ம். உங்க வீரனோட வாள் முதல் முறையா என் ரத்தத்த ருசி பாக்கனும்ன்னு தான் இவ்ளோ நாள் காத்துருந்துச்சா, பாட்டி? சரி தான்."
BINABASA MO ANG
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poetryகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...