தேவ ராஜ்யம்:
தங்கள் கண் முன் இருக்கும் அதிசயத்தை கண்டு வாயடைத்துப் போன நிலையில் நின்றிருந்தார்கள், ரட்சக ராஜ்ய இளவரசிகளும் அவர்களின் அத்தை மகள்களும். அலைகள் ஆர்ப்பரிக்கும் அந்த கடலை கண்ட நொடியில், இத்தனை காலங்களாகத் தாங்கள் ஆதிலோகத்தில் தான் இருந்தோமா? இல்லை, இந்த கடல் தான் புதிதாகத் தங்களின் லோகத்துக்கு வந்திருக்கிறதா என வியத்தபடி நின்றிருந்த நால்வருக்கு அருகில் பறந்துக் கொண்டிருந்தார்கள், தேவ ராஜ்யத்தை சேர்ந்த மூவர்.
தேவ அரசரின் யூகத்தையும் சந்தேகத்தையும் ராகவி மற்றும் சங்கவிக்கு விளக்கிச் சொல்லியிருந்த ரட்சகராஜ்ய இளவாசிகள், அவர்களையும் அதே குகைக்கு அழைத்து வந்திருக்க.. ஏற்கனவே இளவரசிகளை அழைத்துச் சென்ற அதே புனித குகையின் உள்ளே இன்னும் முன்னேறி அவர்களை அழைத்துச் சென்ற தேவ அரசர், இறுதியாக அவர்கள் நால்வரையும் அழைத்து வந்திருப்பது அந்த குகையின் மறுபக்க எல்லைக்கு தான். அதை குகையின் எல்லை என்பதை விட பரந்து விரிந்த மணல் கரையை கொண்ட பெருங்கடல் என்பதே சரியாக இருக்கும்.
"ஆதிலோகத்துல கடலா?" இளைய இளவரசி வாய் விட்டுச் சொல்லிவிட்டாள் என்றால் மற்ற மூவரும் சொல்லவில்லை, அவ்வளவு தான்.
வடக்கே அனாலி பர்வதம் முதல் தெற்கே அராலி பர்வதம் வரையில் மட்டுமே ஆதிலோக வரைபடத்தை அறிந்து வைத்திருக்கும் நம் ஆதிலோக மக்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு எல்லை என்பது இரண்டு மாய இனங்களின் வாழ்விடம் தான். ஆனால், உண்மையில் அந்த எல்லைகளின் எல்லையில் இருக்கும் மெய்யான எல்லை என்பது என்னவென்று அந்த மறைவிடங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. தேவ ராஜ்யத்தில் மறைந்திருக்கும் அதிசயம் தான் இந்த பெருங்கடல்."நான்தான் முன்பே சொன்னேனே, இளவரசி! ஆதிலோகம் உருவான சரித்திரம் வேண்டுமானால் நம் ஒவ்வொரு ராஜ்யத்திலும் ஒன்றாக இருக்கலாம், ஆனால், ஆதிலோகத்தின் ஐந்து ராஜ்யங்களும் எப்படி உருவானது எத்தகைய அமைப்பை கொண்டது என்பது இன்றளவும் பெருமளவில் மறைக்கப்பட்டு தான் உள்ளது."
YOU ARE READING
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poetryகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...