கைபாவை இளவரசன், அவன்

22 4 0
                                    

தன் மகனை குளிக்கச் சொல்லிவிட்டு அவன் அறையிலிருந்து வெளியே வந்திருந்த தேவயாசினி, டைனிங் டேபிளில் சென்று அமர்ந்திருக்க... மகனின் அறைக்குள் இருக்கையில் அவள் முகத்திலிருந்த மலர்சி இப்போது இல்லை. அதற்கு நேர்மாறாக, பதட்டமும் பரிதவிப்பும் அவர் முகத்தை மொத்தமாக ஆக்கிரமித்திருஇந்தது. அவ்வுணர்வுகளின் காரணமாக, அவர் சிந்தயை சூழ்ந்திருந்தது, பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்திருந்த அந்த சம்பவம்.

அன்று, ஒளி நிரம்பிய ஒரு பாதையின் வழியாக தன்னை சந்திக்க வந்து, தன் மகனை குறித்து தன்னிடம் கூறிய அப்பெண்ணின் சக்திகள் தனக்குள் சென்ற நாள். அந்த சக்தியின் தாக்கத்தால், ரக்ஷவனின் பிறப்பின் பிறகு சரியாக பதினான்கு ஆண்டுகள்தான் தன்னுடைய வாழ்நாள் என நிச்சயிக்கப் பட்டுவிட்டது. அப்படி நிச்சயிக்கப் பட்டிருக்கும் அந்த நாள்தான் நாளை மறுநாள். ரக்ஷவனின் பிறப்பின் ரகசியத்தையும் நோக்கத்தையும் அவன் அறிந்துக்கொள்ள வேண்டிய நாள். அவனுடைய பிறந்தநாள்.

அதன்பின் தன்னுடைய துணையின்றி இவ்வுலகில் அவன் தனித்துதான் இருந்தாக வேண்டும். ஆனால், காலை எழுந்தது முதலாக தன்னையே தானே தேடுகிறான் இவன். தன்னை பிரிந்து எப்படி வாழப் போகிறான்? தன் பிரிவை எப்படி தாங்கப் போகிறான்? அவன், சிறு குழந்தை... தாயை பிரியப்போகும் வலியை தன் மகன் தாங்கிக் கொள்வானா? என மகனுடைய எதிர்காலம் பற்றிய கவலைகள் ஒரு புறமாக இருப்பினும், அன்று சந்தித்த அப்பெண்-ஷிவேதனா-கூறிய செய்தியின் நினைவுகளும் ஒருபுறமாக மேலெழும்பி கொண்டே இருந்தது.

ரக்ஷவனின் பதினான்காம் பிறந்த நாளுக்குள் அவன் சக்திகளை உணர்ந்திருக்க வேண்டும். ஆதிலோகத்திற்குள் பிரவேசித்திருக்க வேண்டும். ஆனால் அவனோ எதுவும் அறியா விளையாட்டு பிள்ளையாக அல்லவா இருக்கிறான். இப்போது, அவள் குறிபிட்ட அந்த பதினான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில், என்ன நடக்குமோ? இதன்பின் தன் மகனின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? என்று பரிதவித்துக் கொண்டிருந்தாள், தேவயாசினி .

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Where stories live. Discover now