தமிழ் எக்ஸாம்!

9 4 42
                                    

"அண்ணா, நீ ரெஸ்ட் எடுக்கலாம்ல? எதுக்கு அண்ணா அலைச்சல்?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நாம போலாம்"
இன்னும் முழுமையாக குணமாகாத தன் சகோதரனை நோக்கி இளைய இளவரசி கவலையுடன் கேட்டதற்கு, தன் சொல்லில் எவ்வித உணர்வும் இல்லாமல் பதில் கொடுத்த அபி, அமைதியாக முன்னால் நடந்தான்.

அவனின் செயலை கண்டு ஒருவரை ஒருவர் வேதனையுடன் பார்த்துக்கொண்ட சகோதரிகள் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கள் சகோதரன் மயக்கத்திலிருந்து எழுந்தது முதல் முகத்தில் கலையற்று சொல்லில் உயிர்ப்பற்று வேறு யாரோ போல் தான் இருக்கிறான். இவர்களின் அரவிந்தன் மாமாவும் 'அபியின் ஆத்ம-சக்தி மீண்டும் வலு பெறுவதற்கு குறைந்தது இரண்டு வாரமாவது ஆகும் என கணித்திருந்தது எல்லாம் சரியாக தான் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியோ இவன் முன்பாகவே எழுந்துவிட்டாலும் அவனின் ஆத்ம சக்தி இன்னும் குணமாகவில்லை' என சொல்லியிருந்தார்.

இப்போது, தீரா சொல்லிவிட்டு சென்ற செயலை முடிப்பதற்காக நுவழி பாட்டியின் வீட்டுக்கு இளவரசிகள் புறப்பட... தானும் உடன் வருவதாக சொல்லி அவர்களுடன் புறப்பட்டு விட்டான் அபி.

ரக்ஷாவிற்கு பதிலளித்துவிட்டு ஒருசில அடிகள் நடந்தவன், அவ்விருவரும் தன்னை தொடராததை  கண்டு தன் நடையை நிறுத்தி, "என்ன? வரலையா?" பின்னோக்கி இருவரையும் பார்க்க, "ம்ம் வாறோம், அண்ணா" அவனுடன் சேர்ந்தே நடந்தவர்கள், இரண்டு நிமிடத்தில் நுவழி பாட்டியின் வீட்டை அடைந்து விட்டார்கள்.

"வாருங்கள் இளவரசி-"கதவை திறந்த நொடியில் இளவரசிகளின் முகங்களை கண்டு மகிழ்ந்த நுவழி  பாட்டியின் கண்கள், அபியை கண்ட நொடியில் அவனை மட்டும் நோக்கிக் குறுகியது.

"உங்கள் அண்ணன் ஏன் இப்படி இருக்கிறான்?" 

"அதுவா பாட்டி, ரட்சகனோட கவசம் நீங்குனப்போ நாங்க அங்க போயிருந்தோம்ல, அப்போ நிழல் தேசத்த சேந்தவங்க இவனோட ஆத்ம-சக்திய எடுத்துக்குட்டாங்க. அதனால தான் இப்டி" மாயா பதில் கொடுக்க, "சரி, உள்ளே வாருங்கள்" அம்மூவரும் வீட்டினுள்ளே வருவதற்கு வழி கொடுத்து நின்ற நுவழி பாட்டி, அபியின் மீது வைத்திருந்த தன் பார்வையை திருப்பியிருந்தாலும் அவனையே தான் கவனித்துக் கொண்டிருந்தார். 

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Donde viven las historias. Descúbrelo ahora