paguthi 5

2.9K 179 65
                                    


அந்தி சாய்ந்து கதிரவன் தன் கடல் தாயின் அணைப்பிற்குள் செல்லும் நேரம் அர்ஜுனும் கார்திக்க்கும் மாயாபுரியை அடைந்தனர் .மாயாபுரி மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்ச நான் அழகா என் ஆடல் அழகா என காண்போரை கேள்வி கேட்கும் அழகிய மயில்களும்.நிலத்தில் கால் படுமோ என துள்ளி குதித்து ஓடும் மான்களும் அவற்றோடு நீரில் போட்டியிடும் மீன்களும் என மாயாபுரி மாயலோகத்தை ஒத்த அழகோடு இருந்தது (அதீத அழகு ஆபத்தும் ஆகும்)

கார்த்திக் அக்காட்சியை கண்டு "beautiful " என்று கூற அர்ஜுனோ தான் என்றோ தொலைத்த விலைமதிப்பில்லாத ஒன்றை காண்பது போல் அவ்வூரின் அழகை பார்த்து கொண்டிருந்தான்.பின் இருவரும் தங்களின் தங்கும் விடுதிக்கு சென்றனர்.அங்கு சுவற்றை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் அர்ஜுன் அதை கண்ட கார்த்திக் (இவன் என்ன ஏதோ பெரிய கௌண்டமணி செந்தில் காமெடி ஓடுற மாறி வெறும் செவுத்த பாத்து சிரிக்கிறான் இவன இப்டியே விட கூடாது கேட்ருவோம் ) என்று நினைத்துக்கொண்டு அர்ஜுனின் தோளை தொட்டு அழைக்கிறான் பின் "மச்சான் நானும் காலைல இருந்து பாக்குறேன் சிரிச்சுகிட்டே இருக்க என்ன விஷயம் டா" அதுக்கு அர்ஜுன் கார்திக்க பிடிச்சு கன்னத்துல கிஸ் பண்ணிட்டு (அய்யய்ய அவனா நீ ) மச்சான் நேத்து என் கனவுல அந்த பொண்ணு வந்தா டா வந்து

"நிழலாக தொடர்கிறான் உன்னை

நினைவால் அணைக்கின்றேன்

நித்தமும் உன்னை

நிழலான என்னை 

நிஜமாக காண

நின் விழி திறந்திடு

வழி அது கிடைத்திடும் "

அப்டின்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டா டா கண்ணா தெறந்து பாத்தா நம்ம commisioner குடுத்த கேஸ் ஹிஸ்டரி file தான் இருந்துச்சு "

கார்த்திக் "அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் ?"

அர்ஜுன் "அட மங்குனி அமைச்சரே அதுக்கு என்ன அர்த்தம்னா அவளை நா மாயாபுரில்ல பாக்க போரேன்னு அர்த்தம் சரி சரி பேசி பேசி என் timeah வேஸ்ட் பண்ணாத நா என் கனவை continue பண்ணனும் குட் நைட் " என கூறி விட்டு உறங்கி விட்டான் இங்கு கார்திக்கோ இது எங்க கொண்டு போய் விடப்போகுதோ என்று நினைத்துக்கொண்டு உறங்கினான்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now