paguthi 14

2.3K 167 87
                                    

அங்கே அவ்விடத்தில் தன் பார்வையை சுழல விட்ட கார்த்திக்கின் கண்ணில் பட்டதோ தொட்டில்,மஞ்சள் சரடுகளால் நிறைந்திருந்த ஒரு மரம் தான் .அப்பொழுது அவனது சிந்தையில் வந்தது அன்று அவன் இவ்விடத்தைப் பற்றி விசாரிக்கையில் ஒரு மூதாட்டி கூறியது தான் .

"இந்த ஊரு திருவிழா அப்போ நடக்குற சுமங்களிப் பூஜை முடிஞ்சதுக்கு அப்பறோம் கல்யாணம் ஆகாத கன்னி பொண்ணுங்களும் கல்யாணம் ஆகி கொழந்த இல்லாத பொண்ணுங்களும் இந்த ஆத்தங்கரைல இருந்து 2 காத தூரத்துல இருக்குற ஒரு தெய்வ மரத்துக்கு போய் தாலியையும் தொட்டிலையும் கட்டிட்டு வருவாங்க.அப்டி செய்த அடுத்த 3 மாசத்துல பலன் கெடைக்கும்ங்கிறது எங்க ஊருல காலம் காலமா நம்புற ஒரு விஷயம்.

என்றார் பின் கார்த்திக்"அப்போ பாட்டி இது வரையும் ஏதாவது கல்யாணம் ஆன பொண்ணுங்க காணாம போய் இருக்காங்களா??என்று கேட்க

அதற்க்கு அப்பாட்டியோ "இல்லப்பா எங்க ஊருல எவ்ளோ கொடூரமான கெட்டவனா இருந்தாலும் கல்யாணம் ஆன பொண்ண தப்பான எண்ணத்தோட பார்க்க மாட்டாங்க.கல்யாணம் ஆன பொண்ணுங்க எங்க ஊரு அம்மனுக்கு சமம் ."

என்பதே ஆகும் சற்று யோசித்தவன் பின் முட்டியிட்டு அமர்ந்திருந்த மித்ராவை தன் கரங்களால் தூக்கி சென்றான்.

அவனது செய்கையில் மிரண்ட மித்ரா"கார்த்திக் என்ன பண்ற விடு " என்று கத்த அவனோ அவளை ஒரு பார்வையில் அடக்கினான் .அவனது செய்கையில் குழம்பி இருந்தார் அவ்வூர்த் தலைவர்.

மித்ராவை அம்மரத்தின் அடியில் இறக்கி விட்டவன் அம்மரத்தில் இருந்து திருமாங்கல்ய சரடு ஒன்றை எடுத்து மித்ராவை நெருங்கினான் .அவனது செய்கையின் அர்த்தம் உணர்ந்த மித்ரா செய்வதறியாது சிலையென நின்றாள்.

அவளை நெருங்கிய கார்த்திக் சர சர வென பாயும் ஆற்றின் சத்தம் மேல தாள ஒலியாக,மரத்திலிருந்து உதிரும் பூக்கள் அட்சதை ஆக,சூரிய தேவனையும் நதித் தாயையும் ,காட்டின் இயற்கையையும் சாட்சியாகக் கொண்டு மித்ராவின் செங்கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக்கினான்.திருமாங்கல்யம் கழுத்தில் ஏறும் வேளை மித்ராவின் கண்கள் கண்ணீரை சுரந்தது சுனை போல.கார்திக்க்கோ "சாரி மித்து "என்று தன் மனதில் மன்னிப்பை வேண்டினான்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now