Paguthi 12

2.6K 180 93
                                    

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது.அர்ஜுனும் கார்திக்கும் தயாராகி  பிரியா,அவினாஷ் மற்றும் மித்ராவுடன் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கார்த்திக் ரேடியோவில்

"கண்ணால் பேசும் பெண்ணே

என்னை மன்னிப்பாயா

ஒரு தவறை தவறி செய்தேன்

என்னை மன்னிப்பாயா "

என்ற பாடலை ஒலிக்கவிட்டு மித்ராவின் பதிலுக்காக அவள் முகத்தை கண்ணாடியில் நோக்க அவளோ ஹெட் செட் மாட்டி கொண்டு பாட்டு கேட்டு கொண்டிருந்தாள்.

கார்த்திக்கின் முகம் உடனே வாட அதை கண்ட அர்ஜுன் தன் சிரிப்பை அடக்க மிகவும் கஷ்ட பட்டான்.பின் அனைவரும் தங்கள் அலுவலகத்தை அடைய அங்கு பட்டு வெட்டியும் சட்டையும் அணிந்து 2 ,3 பேருடன் அவர்களுக்காக ஊர்த்தலைவர் காத்திருந்தார்.ஊர்த்த தலைவர் கார்த்திக் மற்றும் அர்ஜுனிடம் வணக்கம் தெரிவிக்க அவர்களும் பதில் வணக்கம் செலுத்தினர்.

பின் அர்ஜுன்"நேத்து உங்க கடிதம் கெடச்சுது இந்த ஊருலயும் திருவிழா அப்போ தான் பல துர்சம்பவங்கள் நடக்குது அதுனால நீங்க இந்த ஊர்த் திருவிழா பத்தி சொன்னிங்கன்னா பாதுகாப்பு குடுக்க வசதியா இருக்கும் "என்றான் 

அதற்கு ஊர்த் தலைவரோ "இந்த ஊருல காலம் காலமா இந்த திருவிழா நடக்குது தம்பி.பல மாநிலத்துல இருக்குறவுங்களும் முந்தி இங்க வணிகத்துக்காக வந்து அப்டியே தங்கிட்டாங்க அதுனால பல மாநிலங்களோடு விழாக்களையும் நாங்க இந்த திருவிழா அப்போ கொண்டாடுவோம்.இது 10 நாள் நடக்கும்.சிவனும் ஹரியும் ஒண்ணுங்குற அடிப்படையில நாங்க இந்த திருவிழாவை சிவனும் பெருமாளும் சேர்ந்து இருக்குற எங்க ஊரு கோவில்ல நடத்துவோம்.மொத நாள் அடுத்த நாள்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் போட்டியும் நடக்கும்.அது எல்லாமே கோவிலை சுத்தி இருக்குற இடத்துல தான் நடக்கும்.பல துர்சம்பவங்கள் நடந்ததால் ஊற விட்டு வெளியேறின ஜனங்க எல்லாம் கூடுறது இந்த திருவிழாக்கு தான்.இன்னைக்கு மாலைல பந்தக்கால் நட்டு திருவிழாவை தொடங்குவோம்."என்று கூறி முடிக்க 

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now