சம்யுக்தா மடிந்ததும் அவளால் சிலையாக பட்டிருந்த அரச குடும்பத்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்றனர் .அவர்களிடம் வந்த அர்ஜுன் பிரியா மற்றும் மித்ரா கார்திக் அந்த பதக்கத்தை சிவபெருமானிடமே சேர்த்துவிட்டனர்.
பின் அந்த இடத்தை பற்றிய அனைத்தையும் ஆதாரத்தோடு அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தனர்.நம்பமுடியாத உண்மைகள் அனைத்தும் வெளி வந்தது அந்த பதக்கத்தை தவிர்த்து.அரசாங்கம் அந்த ராஜ்யத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் விவசாயம் செய்யவும் அங்கே பள்ளிகள் வரவும் ஏற்பாடுகள் செய்தது .
அங்கே உள்ளவர்களுக்கு இவை அனைத்தும் புதிதாக இருந்தாலும் அதை சிறிது சிறிதாக ஏற்று கொண்டனர்.ஷிவதேவ் வர்மரும் சித்தாரா தேவியாரும் மணிமேகலையாரும் பிரியா ,அர்ஜுன் ,மித்ரா கார்திக்குடன் சென்னைக்கு வந்தனர்.
அவர்களுக்கு முதலில் நகர வாழ்க்கைக்கு மாறுவது சிரமமாக இருந்தாலும் பின் அதை ஏற்று கொண்டனர்.பின் ப்ரியாவிற்கும் அர்ஜுனிற்கும் ஒரு நன்னாளில் திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது அதே மேடையில் மித்ரா கார்த்திக்கிற்கும் ஊரறிய திருமணம் நடந்தது.
10 வருடங்களுக்கு பிறகு
பிரியா "டேய்ய் அர்வின் டேய்ய் எங்க தான்டா போன "என்று ஏலம் விட்டு கொண்டே இருக்க "அம்மா" என்ற குரல் கேட்டு திரும்பினாள் அங்கே அவளது 7 வயது புதல்வி அவந்திகா நின்று கொண்டிருந்தாள் அவளிடம் சென்றவள் அவன்திமா அர்வினஹ் பாத்தியா ?"என்று வினவ
அவளோ "இல்லம்மா நா பாக்கல அப்பா உன்ன கூப்டாருமா"என்று விட்டு செல்ல
அவளோ "நேரம் கெட்ட நேரத்துல இந்த அர்ஜுன் வேற "என்று முனகிக்கொண்டே உள்ளே செல்லவோ
அவன் அவளை இழுத்து சுவரோடு நிற்க வைத்தவன் அவளுக்கு இரு பக்கமும் கை போட்டு "என்ன சொல்லிட்டு வந்த இன்னொரு முறை சொல்லு பாப்போம் "என்க
அவளோ "ஹைய்யோ என்ன அர்ஜுன் இது காலங்காத்தால விடுங்க எதுக்கு கூப்டீங்க "என்று நெளிய அவளோடு இன்னும் ஒட்டி

YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18