paguthi 27

2K 158 85
                                    

அவர்கள் அந்த அறையை விட்டு வெளியேறவும் இங்கே சம்யுக்தாவின் ஷக்தி பூஜை நிறைவடையவும் சரியாக இருந்தது .அங்கே அது வரை உறைந்து போய் இருந்த கார்த்திக் மித்ரா கையில் வாளை எடுத்து அந்த பெண்ணை பலியிட அதில் தெறித்த ரத்தம் அவள் முகத்தில் தெறித்த கோரக் காட்சியை பார்த்து தன் கண்களை மூடிக் கொண்டான் அப்பொழுது அவனுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது ..

அன்றொரு நாள் ஊர்த் திருவிழாவின் கடைசி நாள் அன்று 10 ஆடுகளை பலியிடுவதற்காக வைத்திருந்தனர்.அதை கண்ட

மித்ரா "கார்த்திக் ஏன் இந்த ஆடுங்க எல்லாம் இங்க கூட்டமா இருக்கு ?"என்று வினவ

கார்த்திக் "ஆங் எல்லாரும் கட்சி அமைக்குறாங்கல்ல அதான் ஆடுகளாம் சேந்து கட்சி அமைக்க போகுதாம் அதான் எல்லாம் கூட்டமா இருக்கு " என்று கூற

மித்ராவோ "உண்ட போயி கேட்டேன் பாரு என் புத்திய" என்று கூற

கார்திக்கோ "அய்யோயோ மித்து குட்டி நா இன்னைக்குன்னு பாத்து ஸ்லிப்பர்ஸ் போடலையேடா பூட்ஸ்ல போட்ருக்கேன் "என்று கூறியவனை கொட்ட போக அப்பொழுது அம்ம்ம்ம்மாஆ என்ற ஆட்டின் சத்தம் கேட்டு அங்கே திரும்பி பார்க்கவோ அந்த ஆடை வெட்டியதில் அதன் கழுத்தில் இருந்து வந்த ரத்தம் அந்த இடத்தையே சிகப்பாய் மாற்றி இருந்தது அதை கண்ட மித்ரா அங்கேயே தனது தலையை பிடித்து கொண்டு மயக்கமடைந்தால் .

.அது வரை சிரித்துக் கொண்டிருந்த கார்த்திக் மித்ரா மயங்கவும் பதறி "மித்து மித்து என்னாச்சுடி "என்று அவளது முகத்தில் தண்ணீர் தெளிக்க அதில் விழித்தவளிடம்

கார்த்திக் "என்னாச்சு மித்து ஏன் திடீர்னு மயங்கிட்ட ஒழுங்கா சாப்பிடுன்னு சொன்னா கேக்குறியா "என்று கூற

மித்ராவோ "டேய்ய் தடியா நா எல்லாம் ஒழுங்கா தான் சாப்பிடுறேன் எனக்கு bloodah பாத்தாலே அல்ர்ஜி மறந்துட்டியா ".என்று கூற

அவன் "அட ஆமால்ல நீ இங்க இருக்க வேணாம் வா போலாம் "என்று கூற

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now