அவர்கள் அக்கொடிகளை விளக்கி விட்டு பார்க்க அங்கோ ஒரு கல்லாலான சுவர் போன்ற அமைப்பு இருந்தது .அர்ஜுன் வேகவேகமாக அங்கிருந்த கொடிகளை பிடுங்க அந்த கொடிகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு திரையை போல் இருந்தது.அவன் இழுத்த வேகத்தில் அந்த கொடிகள் பாதி தூரத்திற்கு அந்து வந்து விட்டது.கொடிகள் அந்து விழுந்ததும் அவர்கள் கண்டதோ சுமார் 20 அடி உயரத்திற்கும் குறையாமல் கருங்கல்லால் செய்யப் பட்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் தடுப்பு சுவற்றை தான் .
அதைக் கண்ட அர்ஜுனிற்கும் ப்ரியாவிற்கும் திகைப்பு மென்மேலும் கூடியது.அர்ஜுன்"இட்ஸ் இட்ஸ் unbelievable .இந்த அடர்ந்த காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம இப்டி ஒரு சுவரா?இது என்ன இந்த காட்டோட முடிவா??"என்க
ப்ரியாவோ "இல்ல அர்ஜுன் எனக்கென்னவோ இது தான் பல உண்மைகளோட ஆரம்பம்னு தோணுது .இதுக்கு அந்த பக்கம் என்ன இருக்குன்னு நாம பார்த்தே ஆகணும் "என்று பிரியா கண்ணில் ஓர் உறுதியுடன் கூற அர்ஜுனிற்கு இதைப் போல் பிரியா பேசுவது புதுமையாக இருந்தாலும் அவன் உள்ளே எவ்வாறு செல்வது என்று யோசித்தான்.
பின் இருவரும் அந்த சுவற்றை ஒட்டியே ஏதேனும் துவாரமோ வழியோ இருக்கின்றதா என்று நோக்க அவர்களுக்கோ எதுவும் கிடைக்கவில்லை.பின் பிரியா சோர்வில் அந்த சுவற்றின் ஒரு பகுதியில் தன் கையை ஊன்றி நிற்க எங்கோ ஒரு கதவு திறப்பதைப் போல் சத்தம் கேட்டது பின் இருவரும் சத்தம் வந்த திசையை நோக்க அங்கோ அந்த சுவற்றின் ஒரு பகுதி உள்ளிழுக்கப்பட்டு வழி உருவாகி இருந்தது.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் அர்ஜுன் அவனது கையை நீட்டினான் இனி உனக்கு துணையாக நானிருப்பேன் என் கரம் கோர்ப்பாயா என்னும் விதமாக ப்ரியாவும் அவளது கையை தனது கையோடு கோர்த்து கொண்டு இருவரும் உள்ளே சென்றனர் .
(போன epila கார்த்திக் என்ன ஆனான்னு நா சொல்லவே இல்ல இப்போ சொல்லிடுறேன் )
கார்த்திக் ஜீப்பில் இருந்து சென்றுகொண்டிருக்க அவனது கைபேசி பையில் இருந்து நழுவி கீழே விழுந்தது அதை அவன் கவனியாது சென்று கொண்டிருந்தான் அவன் மிக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பொழுது அவனது சிந்தையில் மித்ரா மட்டுமே இருந்தால் அதனால் அவனுக்கு பிரியா மற்றும் அர்ஜுன் அழைத்தது செவியில் விழாமல் போனது .பின் அவன் நடந்து நடந்து சோர்ந்து போனானே ஒழிய மித்ரா எங்கு சென்றால் என்று எந்த துப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை.
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18