pagudhi 6

2.8K 178 60
                                    

sorry friends எக்ஸாம்ல கொஞ்சம் பிஸி ஆயிட்டேன் இனி time கிடைக்கலே அப்டேட் பண்ணிடுறேன் ஓகே இப்போ கதைக்குள்ள போகலாம்

அர்ஜுன் அந்த காகிதத்தை பிடிக்க முற்பட அது ஒருவர் முகத்தில் சென்று விழுகின்றது .அவன் உடனே அந்த உருவத்தை நோக்கி செல்கின்றான் அப்பொழுது அந்த பெண் அந்த காகிரிதத்தை தன் முகத்தில் இருந்து எடுக்கிறாள் நம்ம அர்ஜுன் அந்த இடத்திலேயே சிலையாகிப்போகின்றான் காரணம் அவன் கனவின் நாயகியை கண்டான் அவள் கண்கள் வழி .ஆம் அந்த பெண்ணின் கண்கள் தான் நம்ம அர்ஜுனை தூங்க விடாமல் (சாரி ராத்திரியில தூங்க விடாம அவன் தான் அதுக்கு பதிலா பகல்ல பத்து மணி வரையும் தூங்குறானே ) செய்தன.

சரி நம்ம கார்த்திக் நெலமைய கொஞ்சம் பாப்போம் வாங்க

காகிதத்தை தேடிக்கொண்டு போன கார்திக்கிடம் சிக்காமல் ஒரு காகிதம் மட்டும் ஒருவரது கால்களில் விழுகின்றது அவரை நிமிர்ந்து பார்த்த கார்த்திக் நீயா என்று ஆச்சர்யப்படுகின்றான் இவன் இவ்வாறு கேட்க 

அந்த பெண்ணோ "டேய் மலைமாடு என்ன இங்கயும் நிம்மதியா விட மாட்டியாடா என்னடா 5 வருஷமா நல்லா போகுதேன்னு நெனச்சன் வந்துட்டியா ??"என்கிறாள் 

அதற்க்கு அவனோ "ஏய் பூனைக்கண்ணி உன்ன பாக்க வந்தேன்னு நெனச்சியா நா கூட ஏதோ பொண்ணு கால் மாறி இருக்கே காலைலயே நல்ல முகத்தை பாத்துட்டு நல்லா ஆரம்பிக்கலாம்னு நெனச்சன் ஊஹூம் இன்னைக்கு என் நாலு வேலங்குனாப்ல தான்.பேரு தான் மித்ரா ஆனா கொஞ்சமாவது friendly nature இருக்காடி உன் கிட்ட." என்கிறான்

(ஆமாங்க இவன் ஆச்சர்ய பட்டது மித்ராவை பாத்துதான் ஆனா இவனுக்கு எப்படி இவளை தெரியும் ?? போக போக தெரியும் வெயிட் பண்ணுங்க )

உடனே மித்ராவோ "மனுஷங்க கிட்ட தான் friendlyaah இருப்பாங்க மனுஷ கொரங்கு கிட்ட எல்லாம் friendlyaah இருக்க முடியாது ."

என்கிறாள் இப்படியே இவர்களுக்குள் வாக்கு வாதம் நடைபெற அதை அவ்வழியே செல்பவர்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now