paguthi 18

2.2K 153 74
                                    

கார்த்திக்கின் சத்தம் கேட்டு அங்கு வந்த ப்ரியாவும் அர்ஜுனும் அவன் தரையில் முட்டியிட்டு அமர்ந்து இருப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்து நின்றனர் .

பின் அவனிடம் சென்ற ப்ரியாவும் அர்ஜுனும் கார்திக்க்கை பிடித்து உலுக்க அவன் அர்ஜுனை கட்டி பிடித்து "அவ ஏன்டா போனா.அவ இல்லாம நான் எப்படி டா இருப்பேன் " என்று பிதற்றத் தொடங்கினான் .

அவன் கூறுவது விளங்காத அர்ஜுன் "டேய்ய் கார்த்திக் என்ன ஆச்சுடா ஏன் இப்டி பிதற்றுற மித்ரா எங்க?""என்று வினவ ப்ரியாவோ கார்த்திக் கையில் கசங்கி இருந்த மித்ராவின் கடிதத்தை பார்த்து விட்டு திகைத்து நின்றாள்.

இருவரையும் பார்த்த அர்ஜுன் என்ன நடக்கின்றது என்று புரியாமல் "காய்ஸ் கேன் யு ஜஸ்ட் ஸ்பீக் அவுட் .என்ன நடக்குது இங்க ??"என்று கேட்க 

கார்திக்கோ "என் மித்ரா என்ன விட்டு போய்ட்டாடா .வாழ்க்கையை ஆரம்பிச்சவளே அத முடிச்சுக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டா ."என்று மித்ராவின் கடிதத்தை அவனிடம் கொடுக்க அர்ஜுனோ என்ன செய்வதென்றும் மித்ராவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பதும் தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் விட்டதைப் போல் உணர்ந்தான் .

பின் அவ்விடத்தில் இருந்து எழுந்த கார்த்திக்"உன்ன அவ்ளோ சீக்கரம் விட்டுற மாட்டேன் மித்ரா .உனக்கும் என்ன புடிச்சுருக்குனு தெரிஞ்சதுக்கு அப்பறோம் நான் உன்ன அவ்ளோ சீக்கரமா என்ன விட்டு போக விட்டுற மாட்டேன் .நீ எங்க இருந்தாலும் உன்கிட்ட வருவேன் "என்று கூறி வெளியே செல்ல போனவனை அர்ஜுன் கரம் பிடித்து தடுத்தான் .

அர்ஜுன்"ஹே கார்த்திக் உணர்ச்சிவசப் பட்டு ஏதாவது பண்ணாத பொறுமையா தேடி பாப்போம்"என்க 

கார்த்திக் "பொறுமையாவா என் பொண்டாட்டி எங்க போனான்னு தெரியாம நா அவளை கண்டு பிடிக்க போறேன் நீ என்னனா என்ன பொறுமையா இருக்க சொல்லுற"என்று கத்த

 ப்ரியாவோ"exactly அவ எங்க போனான்னு நமக்கு எந்த cluevum இல்ல சோ நாம பொறுமையா தான் கார்த்திக் அவளை trace பண்ணனும்"என்று கூற அவனோ அவர்கள் கூறுவது எதையும் காதில் வாங்காமல் தன் மடிக்கணினி கொண்ட பையை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora