paguthi 26

2.1K 151 47
                                    

அவளை பின்தொடர்ந்த ருத்திரா ஒரு மலை முகடின் உச்சிக்கு கொண்டு வர பட்டால்.அந்த ராத்திரி வேளையில் ஆந்தைகளின் அகவலும்,ஓணான்களின் ஊளையும் அந்த சூழலை அச்சுறுத்துவதாக மாற்றியது மேலும் அங்கே மண்டை ஓடுகள்,குங்குமம் ,மஞ்சள்,இருந்தது யாகம் வளர்ப்பதற்காக வைக்க பட்டிருந்த ஹோம குண்டத்தில் விறகுகள் அடுக்க பட்டு தயார் நிலையில் இருந்தது.அதன் முன்னேமிகவும் கோரமான தோற்றத்தை உடைய ஓர் காளி சிலை இருந்தது.அந்த காளி சிலை சுமார் 20 அடி இருக்கும்.அது ஒரு காலை தூக்கி கொண்டு கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக மாட்டிக் கொண்டு சிவந்த கண்களுடன் மிகவும் உக்கிரமான தோற்றத்தை பெற்றிருந்தது .

அந்த இடத்தின் தோற்றமே அச்சத்தை மூட்டுவதாய் இருந்தது ஆனால் இது எதையும் கண்டு எந்த ஒரு சலனமும் ருத்திராவின் முகத்தில் தெரியவில்லை .ஏதோ ஜடம் போல் அவள் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள் அவள் . சம்யுக்தா "ருத்திரா அதோ அங்கே போடப் பட்டிருக்கும் யாக குண்டத்தின் முன் சென்று அமர்வாயாக என்க ருத்திராவோ சம்யுக்தாவை பார்த்து ஓர் ஏளன சிரிப்பை சிந்தினால் .அவளது சிரிப்பிற்கு அர்த்தம் புரியாத சம்யுக்தாவோ "என்ன சிரிப்பு ?"என்று வினவ ருத்திராவோ "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் எனில் தர்மமே என்றும் வெல்லும் நீ எத்தனை முயற்சி எடுப்பினும் உன் எண்ணம் ஈடேறப் போவதில்லை சம்யுக்தா"என்று கூற அவள் கூற்றை கேட்ட சம்யுக்தாவோ அந்த இடமே அதிரும்படி சிரித்தாள் பின் "பைத்தியமே தான் நினைத்ததை அடைவதே தர்மமாகும் .யான் நினைத்ததை நிறைவேற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் "என்று கூறினால் பின் "சென்று அமர் "என்று கூற ருத்ரா அவளை நீ என்றும் வெற்றி பெற மாட்டாயடி என்பது போல் பார்த்து விட்டு சென்றால் .அங்கே அவள் கூறிய இடத்தில அமர்ந்து அவள் கூறுவதை போல் செய்து கொண்டிருந்தாள் .

இங்கே அரண்மனையில் இந்திரஜித் நாளை தனது திருமணம் குறித்த கனவுகளோடு துயில் கொண்டிருக்க அப்பொழுது யாரோ அவன் அறைக்கதவை மிகவும் பலமாக தட்டினர்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now