paguthi 31

1.8K 124 82
                                    


அங்கே அந்த ராஜ்யத்தில் உள்ள அனைவருக்கும் நவநாகரீக சாதனங்களை எவ்வாறு உபயோகிப்பது இந்த 100 வருடங்களாக வெளி உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்று அனைத்தையும் படிப்பிக்க பல பேர் கொண்ட ஒரு செயல் குழுவை அரசாங்கம் நியமித்தது.

அங்கே பள்ளிகள்,கல்லூரிகள் கொண்டு வர பட்டது .அனைத்து ஊருக்கும் இருப்பது போல் ஊராட்சி,காவல் நிலையம் என சகல விதமான வசதிகளும் கொண்டு அரா பட்டது.அங்குள்ள மக்கள் ஷிவதேவரின் ஆட்சியின் போது பாட சாலைகளுக்கு சென்றதாலும் சம்யுக்தாவின் கொடுங்கோல் ஆட்சியின் போதும் வீட்டில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு எழுத ,படிக்க மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை,மேலும் தமிழ் இலக்கியங்களையும் போதித்ததாலும் அவர்களுக்கு இவற்றை புரிந்து கொள்வதும் அதற்கு ஏற்றவாறு மாற்றி கொள்வதற்கும் பல காலம் தேவை படவில்லை .

பிரியா,அர்ஜுன்,கார்த்திக், மற்றும் மித்ரா ஷிவதேவ் வர்மரையும்,மணிமேகலையாரையும் ,சித்தாரா தேவியாரையும் சென்னை அழைத்து வந்தனர் .அங்கே அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றவர்கள்

அங்குள்ள லிஃப்டை அர்ஜுன் திறந்து உள்ளே செல்ல சொல்ல சீதாராதேவியார்"என்ன அர்ஜுன் இது ஏதோ கூண்டு போல் உள்ளதே வீடு இத்தனை சிறிதாகவா இருக்கும்?"என்று வினவ

 பிரியா"ஹைய்யோ அம்மா இது வீடில்ல இது லிப்ட் "என்று கூற 

ஷிவதேவரோ"லிஃப்டாஹ் அப்படி என்றால் என்ன?"என்று கேட்க 

கார்த்திக்"அது வந்து அப்பா இது ஒரு machine ஹைய்யோ machineக்கு தமிழ்ல என்ன ahn சாதனம் .இதுல ஏறுனா அதுவே நம்மள மாடிக்கு கூட்டிட்டு போகும் .மின்சாரத்துல இயங்குது "என்று கூற 

மணிமேகலையார் "எது மின்சாரமா மின்சாரத்தில் இயங்குவதா??புதிதாக உள்ளதே இங்கு உள்ள அனைத்தும் விசித்திரமாக உள்ளது "என்று கூற 

மித்ரா"விடுங்க அம்மா இன்னும் கொஞ்ச நாள்ல பழகிடும் "என்று கூறி அழைத்து சென்றனர்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now