அடுத்த நாள் காலை அந்த அரண்மனையை விட்டு மற்ற வீரர்களுடன் வெளியேறிய ப்ரியாவும் அர்ஜுனும் ஆற்றங்கரைக்கு வந்தனர்.பின் அவர்கள் எந்த வழியில் செல்வது என்பது குறித்து எந்த வழியும் தெரியாது நிற்க பிரியா மீண்டும் அந்த ஓலையை எடுத்து அடுத்த பக்கத்தை பார்த்தால் அதில்
ஒரு சூலாயுதம் போன்ற குறியீடு இருந்தது அந்த சூலாயுதத்தை சுற்றி ஓர் பாம்பு பின்னி பிணைந்திருப்பதை போல் இருந்தது பின் அதில் ஓர் சூரியனின் குறியீடும் 10 என்றும் இருந்தது.அதை கண்டவர்களுக்கு மீண்டும் அதன் விளக்கம் யாதாயிருக்கும் என்று விளங்கவில்லை.
அர்ஜுன்"எப்பா இதுல என்ன இருக்குனு யோசிச்சு யோசிச்சே எனக்கு வயசாயிடும் போல பாம்பு பாம்பா இருக்கு ஒரு மண்ணும் புரில .ஷிவா பெருமானே இதுக்கு உன் சூலத்துல ஒரு குத்து வாங்கிறலாம் போல "என்று கூற
பிரியா "அர்ஜுன் இப்போ என்ன சொன்னீங்க?என்று கேட்க
அவனோ "இதுக்கு சூலத்துல ஒரு குத்து வாங்கிறலாம் "என்க பிரியா அவளது கை பையிலிருந்து ஒரு நவீன சாதனத்தை எடுத்தால் பின் அதில் ஒரு பொத்தானை அழுத்தவோ அதில் இருந்து ஒரு திரை வந்தது அதில் ஏதோ செய்தவள் சற்று நேரம் கழித்து முகத்தில் அத்தனை பிரகாசத்துடன் "அர்ஜுன் என்கூட வாங்க" என்க அர்ஜுனோ அவள் என்ன செய்கிறாள் என்பதே புரியாமல் விழிக்க
அவளோ "என்ன அர்ஜுன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க வாங்க போலாம் என்று அழைக்க அவனோ பிரியா வெயிட் வெயிட் என்ன ஆச்சு இப்போ எங்குடு போலாம்ங்குற??என்க
அவளோ அந்த ஓலையை காட்டினாள் . "சூலாயுதம் குடுத்துருக்காங்கன்னா சிவனுக்கு உகந்த மரம் வில்வ மரம் அந்த மரம் சூலாயுதத்தை குறிக்கும் .இந்த இடத்தோட தட்ப வெட்பத்தை வச்சு பாக்கேல வில்வ மரம் இருக்க வாய்ப்பில்லை ஆனா இந்த காட்டோட ஒரே ஒரு எடத்துல மட்டும் இருக்கு அத இந்த floral detector வச்சு செக் பண்ணிட்டேன் அந்த இடத்துக்கு போனோம்னா ஏதாவது clue கிடைக்கும் ."என்றால் .
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18