அழகான மலை பிரதேசம் அங்கே கதிரவனின் கதிர்களால் கண்ணாடியாய் ஒளிர்ந்த பனிகளின் குளுமையிலும் ஆங்காங்கே தெரியும் பனி மான்களின் அழகிலும் தன்னை தொலைத்திருந்த ருத்ரமதி தன் இடையில் ஏதோ படுருவதை உணர்ந்தவள் திரும்ப அங்கோ அவன் நின்றிருந்தான் .அதே தேஜஸுடன் ஒளிர்ந்த முகத்துடன் அவளுக்கு மிக அருகாமையில் அவள் இடையோடு சேர்த்தணைத்து நின்றிருந்தான் .பின் அவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டு அவளுக்கு மிக அருகாமையில் செல்ல அங்கே மழை பெய்தது ருத்திராவின் முகத்தில் மட்டும் .அதில் பதறிய ருத்திரா பதறி எழ ஊர்வசியோ கையில் தண்ணீர் குவலையுடன் நின்று கொண்டிருந்தாள் .
அவளை கண்ட ருத்ரா "ஊர்வசி உன்னை "என்று கத்திக்கொண்டே அவளை துரத்த அவளோ அவளுக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள் .அவளை துரத்தி கொண்டே வந்த ருத்ரா தரையில் இருந்த எண்ணையை கவனிக்க தவற அவளது காலோ அதில் வழுக்கியது .அவள் ஆஹ் என்று விழ போக அவளை இரு கைகள் தாங்கி பிடித்தது .அவள் கண்ணை திறக்க அவள் கண் முன் அவனது முகம் இருந்தது .ஒரே நாளில் அவள் உயிர் மூச்சாகிப் போனவரின் முகம்.அதை நம்ப முடியாதவள் தன் கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்க அவனோ அவளை சற்று தள்ளி நிறுத்தினான் .அவள் தன் அகன்ற விழி கொண்டு அவனை பார்த்து "தா தாம் எவ்வாறு இங்கே ?"என்று வினவ அங்கே ஷிவதேவ் வர்மர் வந்தார் தன் அருமை தங்கை மணிமேகலையுடன்
ஷிவதேவ் வர்மர் "என்ன ருத்ரா ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக பார்க்கிறாய் இது யார் என்று உனக்கு நினைவில்லயா?"
மணிமேகலை "எவ்வாறு இருக்கும் தமயனாரே இவளை 15 வருடங்களுக்கு முன் பார்த்தது .
திருவிழாவில் .அன்று மிகவும் அழகாக பாவாடை சட்டை போட்டுகொண்டு அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தாய் பின் அப்போது நீயும் இந்திரஜித்தும் மிகவும் நெருங்கி பழகுவீர்கள் "என்று அவர் கூறி கொண்டே செல்ல
இந்திரஜித் அவரிடம்"தாயே தாங்கள் பயணக் களைப்பில் இருப்பீர்கள் தாங்கள் சென்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் ."என்று கூறி அவளை ஓர் ஓரப்பார்வை பார்த்து சென்றான் அவளுக்கு அந்த ஒரே பார்வையே முகத்தில் ஓராயிரம் நிலவை குடிகொள்ள செய்தது போன்ற பிரகாசத்தை தந்தது .
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18