paguthi 11

2.6K 176 101
                                    

அவினாக்ஷயும் மித்ராவையும் வெளியில் அழைத்து வந்த கார்த்திக் ஜீப்பை ஓட்ட துவங்கினான் .பின் மித்ராவிடம்"மித்து அப்பறோம் இன்னைக்கு என்ன ரெசீர்ச்சுக்குற பேருல எத்தனை செவித்த ஒடச்ச??"என்று அவள் சண்டையிடுவாள் என்ற எதிர்பார்ப்புடன் கேட்க 

அவளோ"இல்ல mr .கார்த்திக் நா எந்த செவுத்தையும் ஓடைக்கல அதுமட்டுமில்லாமல் அங்க இருந்த சுவர்களையும் அந்த கட்டிடத்தின் அமைப்புகளையும் பார்க்கையில் அந்த கோவில் பழம் திராவிடர்களால் கட்டப் பட்டது என்றும் அங்கு உள்ள சுவர்களின் சிற்பங்களை பார்க்கையில் அங்கு இருந்த மக்கள் பல விதமான பல மாநிலங்களிலும் கொண்டாடும் விழாக்களை கொண்டாடுவார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.அதற்கான கோப்புகளை நான் தங்களுடைய அலுவலகத்தில் நாளை சேர்ப்பித்து விடுகிறேன்.பின் என்னுடைய பெயர் மித்ரா மித்து அல்ல என்னை மிஸ்.மித்ரா என்று அழைப்பதே நல்லது."என்று கூறிவிட்டு தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவினாஷிடம் பேச துவங்கி விட்டால் 

.கார்த்திக்கும் தான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக அவளது மனதை பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து வருந்தினான்.(உனக்கு இன்னும் இருக்குடி மாப்ள )

பின் அர்ஜுனும் ப்ரியாவும் மாயாபுரியில் தங்களது அலுவலகத்தில் வந்து அந்த அந்த ஆள் உயர சித்திரத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.

அர்ஜுன்"பிரியா இந்த ஓவியத்துல இருக்குறது யாரா இருக்கும் பாக்க ஏதோ ராஜா மாறி இருக்காரே ?"என்க

 ப்ரியாவோ அந்த ஓவியத்தை தொட்டு பார்த்தும் அதன் வாசனையை முகர்ந்து பார்த்துக் கொண்டும் இருந்தால் பின்"அர்ஜுன் இந்த ஓவியம் கிட்ட தட்ட 100 வருடங்களிலிருந்து 150 வருடங்களுக்குள் வரைய பட்டிருக்க வேண்டும்.இதில் உள்ள வர்ணம் கிட்ட தட்ட 300 வருடங்களுக்கு முன் நமது தமிழக சிற்பிகளால் உபயோகிக்க பட்டது .இது காட்டில் விளையும் ஒரு சில வகையான பூக்களிலிருந்து எடுக்க படும் வர்ணங்களாகும்.இவை 500 வருடங்களுக்கு மங்காது" என்று கூறினால்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now