இவ்வாறே மிகவும் அழகாக 1 மாதம் கடந்தது.கார்திக்க்கும் மித்ராவும் வழக்கம் போல் சண்டை இட்டுக் கொண்டாலும் முன்பு இருந்ததை விட மிக நெருக்கமாகவும் ,அன்பாகவும் பழக ஆரம்பித்தனர்.நம் ப்ரியாவும் அர்ஜுனும் தங்கள் காதல் கதையை தினம் தினம் தித்திப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
(சரி இப்போ உள்ள போவோம் )
பிரியா மற்றும் மித்ரா வரும் பொங்கலுக்காக அறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது மித்ரா விட்டத்தில் படிந்திருக்கும் ஒட்டடையை சுத்தம் செய்வதற்காக ஒரு முக்காலியில் இன்னொரு முக்காலியை போட்டு ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
சிறிது சிறிதாக முக்காலி நகர்ந்து நழுவத் துவங்கியது .பின் முக்காலி முழுதாக நழுவ அம்மா என்ற கூவலுடன் விழப் போன மித்ராவை கார்த்திக் தன் இரு கைகளிலும் தாங்கி கொண்டான் .வேலை செய்ததன் சுவடாக அவள் நெற்றியில் துளிர்ந்திருந்த வேர்வை துளிகளும் ,வில்லை வலைத்ததைப் போன்ற சீரான புருவமும் தீச்சுடர் போல் அவனது மூச்சுக்காற்றோடு கலக்கும் அவளது மூச்சும் அவனை ஏதோ செய்தது.பின் கீழே தான் விழாததை உணர்ந்த மித்ரா கண்ணை விழிக்க அவள் தன் மணாளனின் முகத்தை அத்தனை அருகாமையில் கண்டு சற்று தடுமாறவே செய்தால்.
பின் மித்ரா"ஹே கார்த்திக் விடுங்க என்னை அதான் நா விழலேல "
என்று அடிக் குரலில் கூற அவனோ அவள் கூறியதை காதில் வாங்கியதாகவே தெரிய வில்லை .
பின் அவளை மெதுவாக இறக்கி விட்டவன் அவள் வெளியில் செல்ல போக அவளது கைபற்றி இழுத்தவன் அவளை கட்டிப் பிடித்து நின்றான்.முதன் முதலாய் ஒரு ஆண்மகனின் அணைப்பு அதுவும் தன் கணவனின் அணைப்பு மித்ராவின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சவே செய்தது .
பின் அவளை விளக்கியவன்.அவளது காதோரத்தில்" மித்து இன்னைக்கு ஈவினிங் வெளிய எங்கயாவது போலாமா" என்று அவள் கன்னத்தை கையில் ஏந்தி கேட்க அவளோ தன் தலையை மட்டும் ஆட்டினாள்.பின் அவளது கன்னத்தில் தன் இதழை பதித்தவன் அறையை விட்டு துள்ளலோடு வெளியேறினான்.
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18