அவர்கள் அங்கு பழைய ஞாபகங்களை பேசி முடித்த பின் அனைவரும் ஜீப்பில் தத்தம் அலுவலகம் நோக்கி பயணித்தனர். அந்த காலை வேளையில் சூரியனின் தங்கக்கிரணங்களின் ஒளியில் பிரியா ஒரு தங்கப்பதுமையென்றே காட்சி அளித்தால் .
அவளை கண்ணாடியின் மூலம் ரசித்துக்கொண்டே ஜீப்பை ஓட்டினான் அர்ஜுன். அப்பொழுது கார்த்திக் அந்த கண்ணாடியை திருப்பி தன் பக்கம் வைத்து தன் தலை சீவ மீண்டும் அதை ப்ரியாவின் பக்கம் திருப்பினான் அர்ஜுன் மீண்டும் கார்த்திக் அதையே செய்ய
அர்ஜுனுக்கோ "இவன் தெரிஞ்சி பண்ரான்னு இல்ல தெரியாம பன்றானா?நானே என் ஆள சைட் அடிக்க கண்ணாடியை திருப்பி வச்சா இந்த கொரங்கு இது முகத்தை பாக்குது .அங்க என்ன இருக்குன்னு இந்த மைதா மாவு அதையே திருப்பி திருப்பி பாக்குதோ?"என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு சாலையில் தன் கவனத்தை செலுத்தினான்.
10 நிமிடப் பயணத்திற்கு பின் அனைவரும் தங்கள் அலுவலகத்தை அடைந்தனர்.அங்கு நுழைந்ததும் அந்த காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவல் அதிகாரிகளும் இவர்களுக்கு salute அடித்தனர் அதை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்ட அர்ஜுனும் கார்திக்கும் முன்னே செல்ல ப்ரியாவும் மித்ராவும் பின் தொடர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களுக்கென கொடுக்கப்பட்ட கேபினுற்குள் நுழைந்தனர் .
அவர்கள் சென்றபின்
அர்ஜுனோ "ஹலோ everyone இதுவரையும் நீங்க எப்டி இருந்தீங்களோ எனக்கு தெரியாது ஆனா இனிமே நேர்மையா இருக்கணும்னு நா சொல்ல மாட்டேன். நீங்க எல்லாரும் ஜாலியா ஒர்க்குக்கு வந்துட்டு இத்தனை வருஷமா எப்படி governmentoda சம்பளம் ,சலுகை எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணீங்கலோ அதே மாதிரி தொடர்ந்து வேஸ்ட் பண்ணுங்க நாமெல்லாம் வேல பாக்கவா வரோம் என்ஜோய் பண்ண தான" என்று புன்னகையோடு ஆரம்பித்து கோபமாக முடிக்க அங்கு இருந்த அனைவரும் தலையை தொங்க போட்டுக்கொண்டனர்.
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18