paguthi 13

2.3K 167 80
                                    

அடுத்த நாள் காலை மீண்டும் கோவிலுக்கு செல்ல அங்கு கோவிலில் அந்த கோவிலில் உள்ள பழமையான தீர்த்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர பட்டு சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் அபிஷேகம் நடந்தது.பின் அங்கு உள்ள பெண்கள் அனைவரும் பல மொழிகளிலும் கடவுளைத் துதிக்கும் பாடலை பாட அந்த இடமே ஒரு தெய்வீக ஒலியால் நிறைந்து மனதிற்குள் நிம்மதியை பரவ விட்டது.பின் ராமாயணக் கதையை நாடகமாக அவ்வூரின் இளவள்கள் மிகவும் நேர்த்தியாக நடித்தனர்.

மாலை வேளை துவங்க அனைவரும் ஆவலுடன் எதிர்ப் பார்த்த வர்ணப்பூச்சு விழா ஆரம்பமானது.

தந்தையும் தாயும் தனயனும் என தங்கள் உறவு என்றும் நிலைக்க வேண்டி தாராளமாக பூசிய வர்ணங்கள் மாயாபுரியை வண்ணமயமாக செய்தது. அங்கு அனைவரும் சந்தோஷமாய் இருக்கும் நேரத்தில் நம் அவினாஷ் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருந்தான் அவன் முன் ஒருவர் வந்து நின்று அவன் வழியை மறைக்க பின்னால் ஓட முயன்றவனை பின்னால் ஒருவர் மறைக்க பயத்தோடு நின்று கொண்டு இருந்தவனின் இரு புறத்திலுமிருந்தும் நீல சாயம் பாய்ச்சப்பட்டது பிரியா மற்றும் மித்ராவின் கரங்களிலிருந்து.

அவன் முகத்தில் சாயத்தை ஊற்றிய இருவரும் சத்தமாக சிரிக்க அவன் அவர்கள் எதிர் பாரா நேரத்தில் இருவர் மேலும் சாயத்தை ஊற்றிவிட்டான்.

பின் இருவரும் தங்கள் முகத்தை துடைத்துக்கொண்டு மீண்டும் அவனை துரத்த அவனோ வெவெவேவே என்று பலிப்பு காட்டி விட்டு சென்று விட்டான்.

அவனை துரத்தி கொண்டிருந்த ப்ரியா யார் மீதோ மோத அவள் நிமிர்ந்து பார்த்த போதோ அர்ஜுன் விஷமமாய் சிரித்து விட்டு அவள் மேல் மஞ்சள் சாயத்தை ஊற்றி விட்டான்.

பிரியா"யு அர்ஜுன்" என்று கத்திக் கொண்டே அவனை தன் புறம் இழுத்து அவன் மேல் தன் மீதிருந்த சாயத்தை ஒட்டவைத்தால்.

அவளது செய்கையில் திகைத்திருந்த அர்ஜுன் அவளின் காதருகில் சென்று "பிரியா பப்ளிக் place "என்று கூறிய பின்பே அவள் தான் செய்யும் காரியம் யாதென்பதை உணர்ந்தாள் பின் அங்கு நிற்க முடியாமல் ஓடியவளை புன் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now