paguthi 20

2.2K 154 80
                                    


மாலை பொழுதும் மலர அந்த ஊரின் அனைத்து மக்களும் அந்த பரந்த அரண்மனையின் வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தனர்.அந்த அரண்மனையை சுற்றிலும் அகழி அமைக்கப் பட்டிருந்தது அங்கே உள்ளே செல்வதற்கு ஒரு வழி மாத்திரமே உள்ளது அதுவும் என்று மூடியே இருக்கும் அரண்மனையின் உள்ளே செல்ல உள்ள ஓர் வழியானது அந்த அகழியின் நடுவே போடப் படும் பாலமே ஆகும்.அரண்மனையின் மறுபுறம் ஏறி செல்ல இயலாதவாறு சிங்கத்தின் வாயிலிருந்து வீழ்வதைப் போன்ற அருவி அமைக்கப் பட்டிருந்தது.அந்த அரண்மனையின் சுவர்களனைத்தும் பற்பல ஓவியங்களாலும்,சிற்பங்களாலும் மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப் பட்டிருந்தது.ஆனால் அந்த அரண்மனையின் அழகை ரசிக்கும் மனநிலையில் எவரும் இல்லை.அங்கே அரண்மனையின் வளாகம் மிகவும் பறந்து விரிந்து அமைத்திருந்தது.அதன் முடிவில் அதாவது அரண்மனையின் வாசலின் அருகில் ஒரு அரியாசனம் அமைக்கப் பட்டிருந்தது .


அதன் அருகில் இரண்டு பெண்கள் கருப்பு உடையில் கண்கள் மாத்திரம் தெரியும் அளவிற்கு மறைத்து கொண்டு நின்று கொண்டிருந்தனர்.அரியாசத்தின் அடியில் இரண்டு ஆண் காவலர்கள் கையில் வேல் தாங்கி நின்றுகொண்டிருந்தனர்.பின் சங்கின் பெரும் முழக்கம் எழுப்பப்பட்டது.மதில் சுவற்றின் நாள் புறத்திலுமிருந்தும் முரசுகள் கொட்டாய் பட்டது.பின் அங்கே அந்த அரண்மனையின் வாயில் கதவு திறக்கப் பட்டது .அரண்மனையின் வாயிலில் தன் முழு மேனியையும் மூடுமாறு உடை அணிந்த ஓர் உருவம் கீழே இறங்கி வந்து அரியாசனத்தில் தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தது.பின் அது மெதுவாக தன் முகத்தை மறைத்திருக்கும் துணியை விளக்கியது.நீல நிறத்தில் மீன் போன்ற அமைப்பை உடைய கண்கள்

அகங்காரத்தை பிரதிபலிக்க கூர் நாசி செதுக்கி வைத்தார் போன்ற இதழில் ஏளனச் சிரிப்புடன் மிகவும் சௌந்தரமான முகத்தை உடைய அப்பெண் அந்த சௌந்தர்யத்தையும் மீறிய விஷப் பாம்பை போல் காட்சி அளித்தால்.பின் "எனது அருமை குடிமக்களே.தங்களை சந்தித்து எத்தனை நாட்களாகிவிட்டது .இந்த அரசி தங்களின் நலனை மாத்திரமே சிந்தையில் கொண்டிருப்பதால் தங்களை சந்திக்க நேரம் கூடி வரவில்லை என்று வஞ்சப்புகழ்ச்சியைப் போன்றதொரு குரலில் கூறினால்.

மந்திர தேசம்(முடிவுற்றது)Where stories live. Discover now