அவ்வரண்மனைக்குள் பிரியா கார்த்திக் மற்றும் அர்ஜுன் நுழைந்தனர்.அங்கே பணியாட்கள் மிகவும் மும்முரமாக அரண்மனையின் அனைத்து இடங்களிலும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.இவர்கள் இங்கே அதை அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருப்பதை கவனித்த ஓர் பணியாள் "என்ன இங்கே அளவளாவிக்கொண்டிருக்கிறீர்.பணிகள் மலை போல் குவிந்திருக்கயில் செல்லுங்கள்" என்று கூற மூவரும் தங்கள் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றனர்.
பின் பிரியா"நாம மூணு பெரும் ஒண்ணா இருந்தா யாருக்காவது சந்தேகம் வந்துரும் அதுனால நா ஒரு பக்கம் போறேன் நீங்க ரெண்டு பேரும் வேற பக்கம் போங்க அப்பறோம் ஈவினிங் நாம தோட்டம் இருக்குல்ல அங்க சந்திக்கலாம் ".என்று கூற அர்ஜுனிற்கோ அவளை தனியாக அனுப்புவதில் சிறிதும் விருப்பமில்லை
அர்ஜுன்"பிரியா என்ன பேசுறேன்னு யோசிச்சு தான் பேசுறியா ??இப்டி ஆபத்தான எடத்துல உன்ன தனியா விட சொல்றியா ?"என்று வினவ
கார்த்திக்"ஆமா பிரியா தேவை இல்லாத ரிஸ்க் நீ .."என்று பேச வர
பிரியா அவனை கை தூக்கி அமைதியாகும் படி கூறினால் பின் "நா நல்லா யோசிச்சு தான் சொல்றேன்.இங்க பாத்தீங்களா ஆண் வீரர்களும் பெண் பணியாட்களும் ஒரு எடத்துல கூட சேர்ந்து இருக்கல நாம மூணு பேரும் இப்போ சேர்ந்து சுத்துனா பாக்குறவுங்க எல்லாருக்கும் சந்தேகம் வரும் அதுனால தான் சொல்லுறேன்.முதல்ல உள்ள போய் இந்த அரண்மனையோட கட்டமைப்பை பாருங்க ஏதாவது suspiciousaah இருக்கான்னு செக் பண்ணுங்க இப்போ வரேன்" என்று விட்டு செல்ல எத்தனிக்க
அர்ஜுன் இன்னும் மனம் ஒப்பாதவனாக அவள் கையை பிடித்தான் பின் பிரியா திரும்ப அவனோ போக வேண்டுமா என்று கண்களாலேயே கேட்டான் அதற்கு அவள் அவனது கையை அழுத்தி எனக்கு எதுவும் ஆகாது நான் உன்னுடையவள் உன்னிடமே திரும்புவேன் என்னும் விதமாய் கண்களாலேயே அவனுக்கு பதில் அளித்து விட்டு சென்றால் .பின் அர்ஜுனும் கார்திக்க்கும் படை வீரர்கள் இருக்குமிடம் நோக்கி சென்றனர் .
YOU ARE READING
மந்திர தேசம்(முடிவுற்றது)
Fantasyhi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18