ஹாய் பிரண்ட்ஸ் சித்தாரா கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து மறுபடியும் பதிவிடுகிறேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள்
காலை நேர சூரியன் தன்னுடைய கடமையை செவ்வென செய்து கொண்டிருந்தான். பார் எங்கும் தன் பொன்னொளியை படரவிட்டு அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பாதுகாவலானாய் அரங்கனாய் வானில் இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
அவனின் பொன்னொளியை பார்த்ததும் பறவையினங்கள் முதல் விலங்குகள், மரம் செடி புல் பூண்டு சிறு பூச்சிகளும் தங்களின் பணியை செவ்வென ஆரம்பித்தன.
அவர்களைத் தொடர்ந்தே மனிதர்களும், தங்களுடைய அன்றாட பணியை தொடர ஆரம்பித்தனர்.
"மாளிகை போன்ற வீடு! வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த வீட்டின் பிரமாண்டமே பெரிதாய் தெரியும். ஆனால் அதனுள்ளே இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனமும் வேறுப்பட்டு இருக்கிறது.. அதிகாலையிலேயே துயில் கலைந்த, அந்த வீட்டின் மூத்த மருமகள் அறைக்குள் இருந்து வெளியே வரவும், அவருடைய தவப்புதல்வன் வெளியே கிளம்புவதற்க்கான உடையில் தன் அறையில் இருந்து வருவதை பார்த்ததும், அவருடைய விழிகளில் ஆச்சரியத்தின் சாயல் தெள்ள தெளிவாகவே தெரிந்தது.
தன்னை பார்த்தும் எதுவுமே சொல்லாமல் கடந்து போன மகனை அழைத்தார்.
ஆதி, எங்கே கிளம்பிட்ட அதுவும் இவ்வளவு காலையிலேயே என்ற கேள்வியுடன் தன்னுடைய பேச்சை நிறுத்தினார் ராஜலெட்சுமி. அந்த வீட்டின் மூத்த மருமகள் ஆதியின் அம்மா.
போறவனை தடுத்து கேள்வி கேட்டதும் ஆதியின் முகம் சுருங்கியது. அதே முகச் சுருக்கத்துடன் திரும்பியவன் தன் அம்மாவின் முகத்தை நன்றாக பார்த்துக் கொண்டே..
என்ன மாம்? எதுவுமே தெரியாத மாதிரி என்கிட்ட கேட்கறீங்க?
மகன் தன்னிடம் இப்படி கேட்டதும் ராஜலெட்சுமியின் முகமும் மனமும் சுருங்கியது. என்ன ஆதி இப்படி ஒரு கேள்வியை கேட்கிற? என கேட்டதும்,
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....