"ஹாய் விஜி, என்றபடி தன் அறைக்குள் வந்த நளினாவை, கண்கள் இடுங்க பார்த்தபடி அமைதியாகவே, அமர்ந்திருந்தாள் விஜி.
என்ன விஜி!! நான் ஹாய் சொல்றேன், பதிலுக்கு ஒரு ஹாய் கூட சொல்ல தோணலையா உனக்கு என்று கொஞ்சல் குரலில் கேட்கவும்,
'அய்யோ!!! இந்த பெரியம்மாவுக்கு புத்தி ஏன் இப்டி போகுது? போயும் போயும் என் ஆதி அண்ணாவுக்கு இந்த அல்டாப்பு ராணி தான் கிடைச்சாளா? என மனதுக்குள் புலம்பினாலும், வெளியே உதட்டை மட்டும் விரித்தாள்.
எப்டி நளினா, டூ இயர்ஸ் ஆ, இங்கே இருக்க!! ஆச்சரியமான குரலில் கேட்டவள்... உடனே அவளிடம், உனக்கு பிடிச்சது சிட்டி லைஃப் தானே, என மெதுவாக தன் பேச்சை ஆரம்பித்தாள் விஜி.
எஸ் விஜி! ஐ லைக் சிட்டி லைஃப் சோ மச்" பட் ஐ டூ லைக் ஆதி, என கண்கள் மின்ன சொல்லவும்,
"வாவ் என் ஆதி அண்ணா, ரொம்பபப கொடுத்து வச்சவர். உன்னை மாதிரி ஒரு மாடர்ன் கேர்ள் வைஃபா, வரதுக்கு என்றவள், அவளுடைய ஆடை அலங்காரத்தை பார்த்துவிட்டு உள்ளுக்குள் நகைத்து கொண்டவள்...
ஆமா நளினா, இது என்ன பட்டிக்காடு மாதிரி டிரெஸ் பன்னிருக்க, "ஆதி அண்ணாவுக்கு இந்த தாவணி பாவாடைனாலே அலர்ஜி என்னை கட்டவே கூடாதுனு சொல்லிட்டார், "என்று முகத்தை சுழித்தபடி சொன்னவளை, பார்வையால் வெட்டினாள் நளினா. விஜி தன்னை பார்ப்பதை அறிந்ததும், தன் முகத்தை இயல்பாக்கினாள்.
'ஏன்டி, நீ" எப்படிபட்டவனு எங்களுக்கு தெரியாதா என்ன? யாரை ஏமாற்ற இந்த ஹோம்லி லுக்கு டிராமா, என மனதுக்குள் நளினாவை திட்டிக் கொண்டிருந்தாள் விஜி.
ஆனால் நளினாவோ, தான் உடுத்தியிருந்த பாவாடை தாவணியையும், "விஜியின், ஜீன்ஸ் டாப்ஸையும் பார்த்துவிட்டு மனதுக்கு எரிந்தாள். இந்த அத்தை என்கிட்ட சொன்னது என்ன? இங்கே நடப்பது என்ன? என மனதுக்குள் குமுறிவள் தன் மொபைலில் வந்த பீப் சவுண்ட்டில் வந்திருந்த மெசேஜை படித்தவளின் முகம் மாறுபட்டதை, கண்டும் காணாமல் அமர்ந்திருந்தாள் விஜி.
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....