இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த ஆதி அடுத்த நாள் வெகு நேரம் கழித்தே எழுந்தான். இன்று கம்பெனியில் வேலை குறைவாக இருக்கவும், பொறுமையாகவே தன்னுடைய காலை வேலைகளை செய்து முடித்துவிட்டு அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவனின் முன்பு வந்து நின்றாள் நளினா.
ஹாய் ஆதி டார்லிங்!! என்று கொஞ்சும் குரலில் பேசியபடி தன் முன்னால் நின்றவளை சாதாரணமாக பார்த்தான்.
அதீத மேக்கப்புடன் பாவாடை தாவணியில் சற்றும் பொருத்தமில்லாமல் இருப்பவளை பார்த்து மனதுக்குள் நகைத்துக் கொண்டான் ஆதி.
அதே போல ஆதிக்காகவே தன்னை அலங்கரித்து கொண்டு வந்தது எவ்வளவு நல்லதாக போயிட்டு நம்மலை உத்து வேற பாக்குறான். நளினா செம்மடி உன் அழகில் மயங்காமல் இருந்துடுவானா என்ன? என்று தன்னையே பெருமை பீற்றிக் கொண்டாள்.
என்ன டார்லிங் இது!! மாமா பொண்ணு வந்து இருக்காளே" அவளோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பன்னுவோம்னு நினைக்காமல், பிஸ்னெஸ் அது இதுனு ஓடிட்டே இருந்தா லைஃபை எப்படி என்ஜாய் பன்றது… என்று சிணுங்கலுடன் கேட்டவளிடம் பதில் சொல்ல கூட பிடிக்காமல் முகத்தை திருப்பினான் ஆதி. அய்யோ என்ன பெண் இவள் என் அம்மாவோட புத்தி ஏன் இப்படி போகுது என பல்லை கடித்துக் கொண்டு நின்றான்.
அவனின் முகத்திருப்பலை பார்த்ததும் இப்போ தான் நம்மல நல்லா சைட் அடிச்சான் அதுக்குள்ள மூஞ்சை திருப்புறான் இவனை புரிஞ்சிக்கவே முடியலடா சாமி!! என தோளை குலுக்கி அலட்சியப்படுத்தியவள், ஆதியிடம், டார்லிங், இந்த ஊரில் சொல்லிக்கிற மாதிரி ஒரு பப் கூட இல்லை. பேசாமல் நாம மேரேஜ்க்கு பிறகு சென்னைல இல்லனா அப்ராட்ல செட்டில் ஆகிடலாமா? மணிய பற்றி வொர்ரி பன்னிக்காதே என் டேடியோட ஒட்டு மொத்த சொத்தும் எனக்கு தான் வரும், நாம ஜாலியா லைஃபை என்ஜாய் பன்னலாம், என கண்கள் மின்ன எதிர்கால திட்டத்தை சொல்லிக் கொண்டிருக்க?...
இவளால் எத்தனை நாட்களுக்கு தான் வேஷம் போட முடியும்னு பார்க்கிறேன், என நினைத்தவன் இதற்கு மேலும் இவளுடைய பேச்சை தன்னால் கேட்க முடியாது என்று தோன்றவும், ஆதியோ அவளுடைய எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் அலட்சியப்படுத்தி விட்டு கீழே இறங்கினான்.
ESTÁS LEYENDO
சித்தாரா
Ficción Generalஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....