ஆதியும் அருணும் தங்களுடைய காரை ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு நிறுத்தினர்.
டிடெக்டிவ் ஏஜென்சி என்ற பெயர் பலகையை தாங்கி உயர்ந்து நின்ற கட்டிடத்தை பார்த்த ஆதி, டேய் மச்சான் இவங்களை பற்றி நல்லா விசாரிச்சியா என்று கேட்க?
நான் விசாரித்த வரை இந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி எடுத்துக்கிட்ட எல்லா கேஸையும் வெற்றிகரமா முடிச்சிருக்காங்கடா மச்சி அதனால் தான் இங்கே வந்தோம் என்று சொன்னவன்... ஆதியுடன் உள்ளே சென்றான்.
ரிஷப்செனுக்கு அருகே வந்த அருண், அங்கிருந்த பெண்ணிடம், ஹலோ மிஸ்டர் கிருஷ்ணாவை மீட் பன்னனும் என்றதும்,
அப்பாயின்மெண்ட் இருந்தா தான் சார பார்க்கலாம் என்று கிண்கினியாய் சொல்ல...
ஹலோ மேடம்! நாங்க அவர்கிட்ட அப்பாயிண்ட்மென்ட் வாங்கியாச்சி..... இதான் டைம் நீங்களே செக் பன்னுங்க என்றதும்,
மெல்லிய குரலில் சாரி சார் என்று உதிர்த்தவள் அருணின் தகவலை சரிபார்த்து உள்ளே அனுப்பினாள் அந்த பெண்.
கிருஷ்ணா என்ற பெயர் பலகையை தாங்கிய அறையின் கதவை லேசாக தட்ட
யெஸ் என்ற கம்பீரமான குரல் ஒலிக்க இருவரும் உள்ளே சென்றனர்.
அந்த அறையில் கம்பீரமாக அமர்ந்திருந்தவனை கண்டதும், இருவரின் கண்களும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தத்தெடுத்துக் கொண்டனர். பிரைவேட் டிடெக்டிவ் என்றதும், ஒரு ஐம்பது வயது பெரியவரை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு முப்பது வயது நிரம்பிய ஒருவனை கண்டதும் ஆச்சியப்பட்டனர்.
இருவரின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை அசட்டை செய்தவன்... ப்ளீஸ் பீ சீட்டட் என்று சொல்ல.. இருவரும் அமர்ந்தனர்.
ம் சொல்லுங்க என்று இருவரிடமும் பார்வையை பதித்து கேட்க... அருணும் ஆதியும் தங்களுக்கு தெரிந்தவரையில் அனைத்தையும் சொல்லி முடித்தனர்.
இருவரும் சொன்னதை பொறுமையுடன் கேட்டவன்.. ஓகே கொஞ்சம் க்ரிட்டிகல் கேஸ் தான்... நீங்க உங்களோட பேமிலி மெம்பர்ஸ் ஓட டிடெயில்ஸ் கூடவே அந்த பெண்ணோட சின்னவயது போட்டோ, எங்க ஸ்டாஃப் கேட்கிற எல்லா தகவலையும் சொல்லிடுங்க என்று முடித்தவன் நீங்க போகலாம் என்று பார்வையால் பதிலளித்தவன் இருக்கையில் இருந்து எழ..
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....