"ஆதியின் நெற்றியில், லேசான காயத்திலும் வீக்கம் நன்றாகவே தெரிந்தது. கார் வீட்டை அடைந்ததும், அத்தை, 'ஆதி' வந்தாச்சி என்ற குரலை கேட்டபடியே உள்ளே வந்தான் ஆதி.
ஹாலிலேயே குடும்பத்தினர் அனைவரும், கவலையான முகபாவனையுடன் அமர்ந்திருப்பதை கண்டவன், வேகமாக தன் அப்பாவின் அருகே சென்றவன், எப்டிப்பா எப்போ? என கேட்க...
கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான், ஆதி பேக்டரில பாய்லர் வெடிச்சதில பத்து பேர் இறந்துட்டாங்க... அதனால் பேக்ட்ரிக்கும் சீல் வச்சிட்டாங்க... இத்தனை வருடமாக நாம எல்லா மெஷினரிஸையும் பர்ஃபெக்டா தான் வச்சிருக்கோம் ஆனால், இந்த மாதிரி ஒன்னை நாங்க யாருமே எதிர்பார்க்கல... கேஸ் பைல் பன்னிட்டாங்க... இறந்து போனவங்க பேமிலி மெம்பர்ஸ் எல்லாருமே இதுக்கு நாம தான் காரணம்... திட்டம் போட்டு எல்லாரையும் கொன்று இருக்கோம்னு புதுசா கேஸ் பைல் பன்னிருக்காங்க... கம்பெனியையும் இழுத்து மூடிட்டாங்க என சொல்லவும்,
எப்டிப்பா எந்த இன்வெஸ்டிகேஷனையும் பன்னாமலேயே அவசர அவசரமா கம்பெனியை மூடி இருக்காங்கன்னா இதுல ஏதோ ப்ளான் பன்னி நடந்த மாதிரி இருக்கே? என தன் சந்தேகத்தை முன் வைத்தான் ஆதி.
இன்னைக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வர்ற டேட் தானேப்பா? அவங்க வர நேரம் இப்படி நடந்துருக்குன்னா இது யாரோ சதி செய்திருக்கிற மாதிரி தெரியலை..
ஆமா ஆதி, அவங்க இங்கே என்டர் ஆகவும் பாய்லர் திடிரென வெடிக்கவும் சரியா இருந்தது... அவங்க எல்லாருமே இப்போ நமக்கு எதிரா தான் இருக்காங்க என சொல்லிக் கொண்டிருக்க... ஆதியின் போன் ஒலித்தது.
வெறும் நம்பர் மட்டுமே வர யார் என்று நினைத்தபடியே காலை அட்டென்ட் செய்வதற்கு முன் ஒரு நிமிசம் டேடி என்றவன் சிறிது தள்ளி நின்று ஆன் செய்ய... எதிர்ப்பக்கம் ஒரே சிரிப்பு சத்தமாக கேட்க ஆரம்பித்தது.
எதிர்பக்கம் கேட்ட சிரிப்பிலேயே யார் என்று உணர்ந்தவன்.. இதெல்லாம் உன் வேலை தானா என பல்லை கடித்தான் ஆதி...
أنت تقرأ
சித்தாரா
قصص عامةஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....