தாரா-13

333 22 10
                                    

தாராவுடன், மறுபடியும் அன்பு இல்லத்திற்கு" சென்ற விஜியின் மனம் ஒரு நிலையில் இல்லை... தாரவோ இல்லை வினியோ' எந்த கேள்வி கேட்டாலும், அது எதுவுமே அவள் மூளையை சென்று அடையவில்லை... அவள் மனம் முழுவதும் ஆதியிடமே இருந்தது.

என்னையே, மறந்துட்டு போற அளவுக்கு ஆதி" அண்ணாவுக்கு என்ன ஆச்சி மறுபடியும் ஏதாவது பிராப்ளமா? அதனால் தான் என்கிட்ட சொல்லாமலே என யோசித்துக் கொண்டு நின்றவளின் முதுகில் சுள்ளென்று ஒர் அடி வைத்தாள் வினி.

ஆவென்று வலியில் அலறியவள் பின்னால் திரும்பிட, வினியை பார்த்ததும் எரும மாடே எதுக்குடி என்னை அடிச்ச என சொல்லி முறைத்தவளிடம், 

உன்ன எவ்ளோ, நேரமா கூப்பிடுறேன் கண்ணை திறந்துக்கிட்டே தூங்குற அதான் ஒன்னு வச்சேன் என முறைத்தபடியே வினியும் பதில் சொல்ல, 

எரும எரும அதுக்காக இப்படியா அடிப்ப என வலிக்கும் இடத்தை தடவி விட்டுக் கொண்டே வினியை நோக்கி நகர்ந்தாள் விஜி.

இதுவரை இருந்த மனநிலை மாறி தன்னை அடித்தவளை கட்டையுடன் துரத்தினாள் விஜி. அவளின் அடியில் இருந்து தப்பித்துக் கொள்ள குழந்தைகளுக்கு இடையே புகுந்து ஓடிக் கொண்டிருந்தாள் வினி. இவர்கள் இருவரின் சேட்டையை பார்த்து அங்கிருந்த குழந்தைகள் சிரித்தபடியே நிற்க! "தாராவோ, தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

"அன்று மாலை வரை, "அன்பு இல்லத்தில்" இருந்தவர்கள் ஐந்து மணியை தொடும் போது அன்பரசி அம்மாவின் ஆசியை பெற்றுக்கொண்டு கிளம்பினர். "தாரா வினி, விஜி" மூவரின் மனமும் ஒரு விதமான அமைதியுடன் இருந்தது.

அதே நேரம் தன் மனதில் உதித்த கேள்வியை தாராவிடம், வினியும் கேட்டுவிட, "அவள்" கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் தாரா. ஏனென்றால் இதே கேள்வியை அன்பரசி அம்மாவிடம், "அவள் பலவருடங்களாக கேட்டு அதற்கு இன்று வரை விடையறியாமலேயே இருப்பவளுக்கு வினியின் கேள்வியில் நிலைகுழைந்து போனாள் தாரா.  

 சித்தாராUnde poveștirile trăiesc. Descoperă acum