சிங்காரச் சென்னையில் சற்று புறநகர் பகுதியில் அமையப் பெற்றிருந்த அந்த மகளிர் பெண்கள் விடுதி, வேலைக்கு செல்லும் பெண்களுக்காக இயங்கும் விடுதி இயற்கை வளங்களுடன் கூடிய அந்த கட்டிடம் மூன்று அடுக்கு மாடிகளை கொண்டது.
காலை, நேர பரபரப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் சலசலத்துக் கொண்டிருந்தது.
அந்த விடுதியின் இரண்டாவது மாடியில், மூன்றாவது அறையில் சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே கேட்டுக் கொண்டிருந்தது. நீங்களும் வாங்க அப்படி என்ன தான் அந்த அறையில் நடக்குதுன்னு பார்க்கலாம்.
தாரா, ஏய் தாரா!!! என்றவளின் குரலில் பொறுமை சிறிதும் இன்றி, "கோபம்" அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இருக்காதா பின்னே, எவ்வளவு நேரமாக... தன் தோழியை, எழுப்ப முயற்சித்து!! அது தோல்வியில் முடியவும், "கோபம் எழ" உன்னைத் தான்டி எரும கூப்பிடுறேன் எழுந்திரிடி! கல்லூரிக்கு போக நேரம் ஆகிட்டு... இன்னும் தூங்கிக் கொண்டே இருக்காளே? தலையில் கையை வைத்துக் கொண்டே, ஒருவேளை கும்பகர்ணனுக்கு தங்கச்சியா இருந்திருப்பாளோ? என்று முனகினாள்.
அவளின், ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு ஆண்டவனின் கருணை கிட்டியது போலும்,
ஆழ்ந்த நித்திரையில், இருந்தவளின் மான் விழிகள் இரண்டும்... மெல்ல திறந்தது. தன் முன்னால் பத்ரகாளிப் போல காட்சியளித்தவளை கண்டுக் கொள்ளாமல்,
ஏய், இன்னும் ஃபைவ் மினிட்ஸ் டி!! நான் தூங்கிக்கிறேன் என்றவள், தோழியின் முறைப்பையும் கண்டுக் கொள்ளாமல், மறுபடியும் விட்ட தூக்கத்தை ஆரம்பித்தவள் போர்வைக்குள் தன் முகத்தையும் சேர்த்து இப்போது பாதுகாப்பாக மூடிக் கொண்டாள்.
தாராவின், செய்கையில் அவளின் கோபம் தலைக்கேற!! போர்வையை விலக்கியவள் ஜக்கிலிருந்த தண்ணீரை, தாராவின் முகத்தில் ஊற்றினாள்.... தண்ணீர் மேல பட்டதும் அய்யோ!! "மழை மழை" என கத்திக் கொண்டே எழுந்தவள் 'முன்னால் சொடக்கிட்டு, பாத்ரூமில் ஹீட்டர போட்டுருக்கேன்... போய் ஒழுங்கா குளிச்சிட்டு வர, இல்லை நான் பாட்டுக்கு கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன்' என எச்சரித்தவள் இன்னும் அறைமணி நேரத்தில், காலேஜ் பஸ் வந்திடும் என சிடுசிடுத்து தாராவை, முறைத்து விட்டு போனாள்.
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....