சித்தாரா-25
ஆதி பேக்டரியில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வரவே நள்ளிரவை நெருங்கியிருந்தது.
காரை ஷெட்டில் வைத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தவனின் முகம், சோர்ந்து போய் இருந்தது. இந்த ஒரு வாரமாக ஓய்வின்றி கம்பெனிகளையும் வஜ்ரத்தை பற்றி தேடுதலிலும் ஈடுப்பட்டிருந்ததால், சரிவர உணவு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தான்.
பேக்டரி வேலைகள் ஒருவாராக செய்து முடித்தவனுக்கு, வஜ்ரத்தை பற்றி எந்த தகவலும், தெரியாமல் இருப்பது மனதுக்கு நெருடலாகவே இருந்தது. தன்னிடம் உள்ள சாவியை பயன்படுத்தி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன் தன் அறையை நெருங்கும் போது நளினாவின் அறையில் லைட் வெளிச்சம் தெரியவும், மணியை பார்த்தவன், இரண்டாக பத்து நிமிடம் இருக்கவும், இவ்வளவு நேரம் தூங்காமல் என்ன பன்னிட்டு இருக்கா என அவளுடைய அறையை நோக்கி நகரப் போனவன், திடிரென நளினாவின் அறைக்கதவு திறக்கப்படவும் தூணுக்கு பின்னால் தன் உடலை மறைத்தபடி நின்றான்.
கண்களில் திருட்டுத்தனத்துடன், யாராவது இருக்கிறார்களா என நோட்டம் விட்டவள் மெதுவாக படியில் இறங்கினாள். ஜீரோ வாட்ஸ் பல்பின் ஒளி மட்டுமே வீடெங்கும் கசிந்து கொண்டிருக்க, ஆதியை அவளால் பார்க்க முடியவில்லை.
உடலின் சோர்வில் இது தேவையா என நினைத்தாலும், ஆதியின் மனதில் அப்படி எங்கே தான் போறா அதுவும் இந்த நேரத்தில் என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நளினாவை பின்தொடர்ந்து சென்றான்.
நளினாவின் கையில் ஒரு பேக் மட்டும் இருக்க, அவள் உடுத்தியிருந்த உடையை பார்த்து மனதில் சந்தேகம் எழ, நளினாவுக்கு தெரியாதவாறு பின்னாலேயே சென்றான். அவளை பின்தொடர்ந்து சென்ற ஆதி, நளினா யாரோ ஒருவனிடம் பேக்கை கொடுப்பதும், அதற்கு அவன் ஒரு பாக்கெட்டை எடுத்து கொடுக்க, அதை வாங்கிக் கொண்டவள், திரும்பவும்,
இந்தாம்மா இன்னும் இரண்டு நாளில் இந்த பாக்கெட்டை அதுல இருக்கிற விலாசத்துல கொண்டு போய் கொடுத்துடு, அண்ணாத்தே போன் பன்னா எடுக்கனும் இல்ல, என்ன நடக்கும்னு தெரியும் தானே என குரலை உயர்த்தவும், கும்மிருட்டும், ஆள் அரவமற்ற இடமும் அவளுக்கு பயத்தை உண்டாக்க,, சரி என்று வேகமாக தலையை ஆட்டினாள்.
ESTÁS LEYENDO
சித்தாரா
Ficción Generalஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....