"என்னங்க!! என்ன ஆச்சி? ஏன் உங்க இரண்டு பேரோட முகமும் இப்படி இருக்கு? என அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த கணவனையும் அவருடைய தம்பியையும் பார்த்து தவிப்புடன் ராஜலெட்சுமி கேட்டதும்,
மேகநாதன் எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியுடனே சென்று சோபாவில் அமர, சாமிநாதன் வாயை திறந்தார்.
"அண்ணி, அண்ணாவை எந்த நேரத்திலும் போலீஸ் அரெஸ்ட் பண்ணலாம்" என்று சாமிநாதன் இறுகிய குரலில் சொல்லவும்,
"அதிர்ந்த ராஜலெட்சுமி!! என்ன சொல்றீங்க தம்பி" இவ இவரை ஏன் அரெஸ்ட் பன்னுவாங்க? என்று பயம் கலந்த குரலில் கேட்டவரிடம்,
"இறந்து போன குடும்பத்தை சேர்ந்தவங்க, எல்லாருமே போலீசில்" நடந்த விபத்துக்கு நாம தான் காரணம் என்று சொல்லிருக்காங்க!... கூடவே என்னவென்னவோ புது புது காரணத்தை சொல்லிக்கிட்டு இருக்காங்க!!... யார் அவங்களை தூண்டி விடுறாங்கனே தெரியலை? என்று சொன்னவரின் குரல், உள்ளே சென்றது.
"மாலா பார்த்தியா, உன் வீட்டுக்காரர் சொன்னதை கேட்டியா? உங்க மாமாவை எப்போ வேண்டுமானாலும் கைது பன்னுவாங்களாம், இந்த விசயம் மட்டும் அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது. இதுக்கெல்லாம் காரணம் யாரா இருக்கும்னு நினைக்கிற? இத்தனை வருடமாக கௌரவத்தோட தலைநிமிர்ந்து இருந்த இந்த குடும்பத்துக்கு வந்த சோதனையை பார்த்தியா?, என்று ஏற்கனவே தன் கணவன் சொன்னதை கேட்டு அதுவரை அதிர்ச்சியுடன் நின்றிருந்த மாலாவிடம்" கேட்டார் ராஜலெட்சுமி.
"என்னங்க லாயர்கிட்ட, பேசினீங்களா? என்ன சொன்னாங்க? என்று மாலா தன் கணவனிடம் கேட்க"..
"ஜாமீன் வாங்குறது, ரொம்ப கஷ்டம்னு சொல்றார். ஒரு உயிர் இரண்டு உயிர் இல்ல மாலா, பத்து பேர் இறந்து இருக்காங்க!! என்று வருத்தத்துடன் சொல்ல"
அய்யோ! முதல்ல எல்லாரும் இப்படி புலம்பறதை நிறுத்துங்க! என்ற விஜியின் கோபமான குரலில் அனைவரும் திரும்பினர்.
ராஜலெட்சுமியின் அழுகுரலை கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த விஜி கீழே நடப்பவற்றை முழுமையாக கேட்டவளோ அதிர்ந்தாள். இங்கே இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது என் அண்ணன் ஓடி ஒழிய மாட்டான் எனக்கு என் ஆதி அண்ணா மேல நம்பிக்கை இருக்கு என்று தன்னை தானே சாமாதானப்படுத்தியபடி, நின்றிருந்தவளுக்கு தன் அப்பாவின் வருத்தமான குரலை தாங்க முடியாமல் கத்திவிட்டாள்.
CITEȘTI
சித்தாரா
Ficțiune generalăஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....