"பஞ்சவர்ணத்தின் தம்பி, "வஜ்ரம்" ஆதியின், வீட்டிலிருந்து கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டிற்குள் வேகமாக வந்த மேகநாதனும் சாமிநாதனும்.... ஹாலில் அமர்ந்திருந்த தங்களின் மனைவிமார்களை பார்த்து... அவர்களின் அருகே சென்றனர்.
"ராஜி, வீட்டிற்கு யார் வந்தா? இப்ப தான் செக்யூரிட்டி போன் பன்னி சொன்னான். அதான் அப்படியே போட்டது போட்டபடி வேகமாக வந்தோம் என்க..
என்னத்த!! சொல்ல சொல்றீங்க? "நாங்க, அப்போவே சொன்னோம் கேட்டிங்களா? தங்கச்சி "மகளை" நம்ம வீட்டுக்கு, அழைச்சிட்டு வந்தே தீருவேனு சொல்லிட்டு போனீங்க! இப்போ என்ன ஆச்சி, பின்னாடியே பிரச்சனையும் சேர்ந்து வந்துருக்கு என ராஜி இது தான் சரியான நேரம் என நினைத்து தன் கணவனிடம் முறையிட!
அவரின், பேச்சின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்ட "மாலாவும்" வஜ்ரம் சொல்லிவிட்டு சென்றதையே சற்று மிகைப்படுத்தி சொல்ல... சீறினர் சகோதரர்கள் இருவரும்...
ஏன்டி, எவனோ ஒரு கேடுகெட்டவன் வந்து, "நமக்கும் 'உதயாவுக்கும்' உரிமை இல்லைனு சொன்னா அவனை அடிச்சியோ, இல்ல திட்டியோ விரட்டுறத விட்டுட்டு எங்களை ஒதுங்கி போக சொல்றியா? என தன் மனைவியை பார்த்து சீறியவர் அவர் எதிர்பாரத வேலை மனைவியின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார்.
"மேகநாதனின் செய்கையில் 'மாலா' நடுநடுங்கி போனார்.
இதோ பார், என் தங்கச்சி மகள் இந்த வீட்டுக்கு கண்டிப்பா வருவா? எவன் தடுக்கிறான்னு நான் பார்க்கிறேன் என்றவர் அதே வேகத்தில்,
தம்பி வாடா போகலாம், அவன் யார் அது!! நம்ம தங்கச்சி மகளுக்கு உரிமை கொண்டாடுறது என கர்ஜித்தவர் சாமிநாதனுடன் வெளியேறினார்.
என்னக்கா!! நாம ஒன்னு நினைச்சா இப்ப, வேற ஒன்னு நடக்குது.... மகாராசி காணாமல் போனதுக்கு அவள் அம்மா செத்துப் போன போதே இவளும் செத்து ஒழிஞ்சிருக்கலாம் இன்னைக்கு நாம இவ்ளோ கஷ்டப்பட வேண்டியது இருந்திருக்காது. அவள் இங்கே வர்ரதுக்குள்ளயே இந்த வீட்டு ஆம்பளைங்க எல்லாம் "அவள்" கொடி பிடிக்கிறாங்கக்கா "அவள்" மட்டும் இந்த வீட்டுக்கு வந்தா! நம்மல மூலையில் தூக்கி போட்டுட்டு அவளோட ராஜாங்கம் தான் நடக்கும் என மாலா ராஜலெட்சுமியின் மனதை மேலும் கலைத்தார்.
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....