தாரா-18

267 18 6
                                    

சித்தாரா-18

சென்னையில்:
காலேஜிக்கு சென்றாலும் தங்களுடைய வேலைகளில் முழுமனதாக ஈடுபட முடியாமல் தவித்தனர் தாராவும், வினியும். 

தாராவின் மனதில் விஜியை பற்றி நினைக்கும் போது சில விசயங்கள் நெருடலாகவே இருந்தது. அவளுடைய பேச்சு சில நேரம் முன்னுக்கு பின் முரனாக தோன்றுவது போல இப்போது நினைத்தாள் தாரா.

அவள் தன் அண்ணனோடு இங்கே வந்து போய் கொண்டிருப்பது அன்பரசி அம்மாவின் மூலமாகத் தான் தெரிய வந்தது. அது கூட பரவாயில்லை சமூக சேவை செய்வதை எல்லாருக்கும் சொல்லி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது தான் ஆனால் தன்னுடைய உண்மையான முகவரியைக் கூட அவள் இது நாள் வரை பகிரவில்லை என்பதை நினைத்து அவள் மீது சந்தேகம் வந்தாலும், நானும் அவளுடைய குடும்பத்தை பற்றிய பேச்சை இதுவரை எடுத்ததும் இல்லை அவள் சொன்னதும் இல்லை ஒன்றை தவிர! தன்னுடைய அண்ணனுக்கு மேரேஜ் ஆக போகுது என்று சொல்லும் போதாவது அவளுடைய பேச்சை காதுக் கொடுத்து கேட்டிருக்கலாம் ஆனால் நானே தானே அவளுடைய பேச்சை கத்தரித்துவிட்டேன் இப்போது விஜி எப்படி இருக்கிறாள் சுகமாக இருக்கிறாளா இல்லை உடலுக்கு ஏதும் பிச்சனையா என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோமே என்று தன்னையே திட்டிக் கொண்டாள் தாரா.

வினியிடம் கேட்டும் ஒன்றும் தெரிவதற்கு இல்லை மற்ற தேவையில்லாத வெட்டி பேச்சை பேசுபவள் விஜியைப் பற்றி ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாளே? இவளை என்ன செய்வது. வினியின் மூலமாக விஜியைப் பற்றி தெரிந்த ஒரே விசயம் அவளுடைய சொந்த ஊர் இந்த சென்னை இல்லை என்பது மட்டும் தான். அவளும் வினியை போலவே தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இங்கே தங்கி வேலைக்கு வருகிறாள் என்பது மட்டுமே!! எங்கேயோ தனியே தங்கி இருந்து கல்லூரிக்கு வருபவள் எங்களுடனேயே தங்கி இருக்கலாமே, தனியே வீடு எடுத்தா இல்லை விடுதியிலா என எதுவுமே தெரியாத மூடர்களாக நாங்க இருந்திருக்கிறோம். 

 சித்தாராWhere stories live. Discover now