தாரா-16

290 21 6
                                    

"நளினா, கேட்டதுக்கு தன் 'அண்ணனின்' பதில் என்னவாக இருக்கும் என்பதை, அறிந்து கொள்ள நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார் ராஜலெட்சுமி".

"நளினா, உனக்கு இங்கே என்ன பிராப்ளம்டா, ப்யூச்சர்ல 'நீ' வாழப் போற வீடு தானே, என மகளின் தலையை ஆதூரமாக தடவியபடியே சொல்ல அவளின் முகம் சிறுத்தது.

எங்கே தன் மகள், தன்னுடன் பிடிவாதமாக வீட்டிற்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்தால், என்ன செய்வது என்ற குழப்பம் அவர் முகத்தில் படிந்தது. நளினாவின் தற்போதைய மாற்றத்தை கவனித்தவருக்கு மனசு நிறைவாகி போனது. இந்த கால கலாச்சாரம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து போய்க் கொண்டிருந்த நளினாவின் வாழ்க்கை முழுமையாக இருண்டு விடுமோ, என பயத்தில் ஆழ்ந்தவர் தங்கையின் திடிர் வருகையும் அவருடைய முறையீடும் மனதிற்கு பிடித்து போய்விட, மகளை உருட்டி மிரட்டி அனுப்பிவைத்துவிட்டார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே கவலை தன் மகள் ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டால் போதும் இல்லையேல் பழையமாதிரி ஆகிவிடுவாளோ என மனதுக்குள் ஒருவித பதற்றத்துடன் மகளின் பதிலுக்காக அவளுடைய முகத்தையே பார்த்தபடி இருந்தார் கார்மேகம் நளினாவின் அப்பா ராஜலெட்சுமியின் அண்ணன். தந்தையின் மனம் இவ்வாறு இருக்க அவருடைய மகள் நளினாவின் மனமோ! குமுறியது.

ஆமா நான் ப்யூச்சர்ல இந்த வீட்டுக்கு, "மருமகளா" ஆகப் போறேனோ! இல்லையோ? அது எனக்கு தெரியாது. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்தா நிரந்தர வேலைக்காரியா மாறிடுவேன் அது மட்டும் உண்மை என வாய்க்குள் முனுமுனுத்தபடி தன் அப்பாவை பார்த்தாள் நளினா.

டாடி ப்ளீஸ் இன்னும் எத்தனை நாள் இந்த பட்டிக்காட்டிலேயே இருக்கிறது என்னை நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு போய்டுங்க என விழியில் நீருடன் கெஞ்சவும், கார்மேகத்தின் உள்ளம் பதறிவிட்டது.

தன் சாம்ராஜ்யத்திற்கு எல்லாம் ஒற்றை வாரிசாய் இருக்கும் மகளின் அழுகையில் சிறிது தடுமாறியவர், நளினாவின் கண்களை துடைத்துவிட்டு சரி என சொல்ல வாயை திறக்க போகவும், அய்யோ நளினாவோட அழுகையை பார்த்துட்டு அண்ணன் சரினு சொல்லிட்டா நாம நினைச்சது எதுவும் நடக்காதே முதல்ல அவர் பேசுவதை தடுக்கனும் என்று முடிவெடுத்த ராஜலெட்சுமி வேகமாக அவர்களின் அருகே வந்தார்.

 சித்தாராDonde viven las historias. Descúbrelo ahora