சித்தாரா-23
ஆதியின் கார் ஹாஸ்பிடலை நெருங்கவும், அவனுடைய கண்களில் பட்ட முதல் விசயம் தங்கள் ஃபேக்டரியில் வேலை செய்த ஆட்களின் கோஷமும் போராட்டமும் தான். இதற்கெல்லாம் காரணமான அந்த வஜ்ரத்தின் மீது கட்டுக்கடங்காத அளவிற்கு கோபம் வந்தாலும் தன்னை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவன், காரை பார்க் செய்துவிட்டு மருத்துவமனையின் என்ட்ரன்ஸை அடைய போனவனை திடிரென சூழ்ந்து கொண்டனர்.
ஆதியை பேசவிடாமல், அவர்களின் கோஷமும் கூச்சலும் அதிகரிக்க ஆரம்பிக்க.. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியுமா? என சத்தமாக கத்தவும், கூட்டத்தில் அமைதியும் சிறு சிறு சலசலப்பும் மட்டுமே கேட்டது.
சும்மா கத்தாதிங்க முதலாளி உங்களால் எங்க குடும்பத்தை சேர்ந்த பத்து பேரோட உயிர் போய்டுச்சி அதுக்கு என்ன பதிலை சொல்லுவீங்க!! என்று ஒருவன் சத்தமாக பேசவும், மறுபடியும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுக்கெல்லாம் காரணமான உங்களை நாங்க சும்மா விடமாட்டோம் தண்டனை வாங்கி கொடுத்தே தீருவோம் என்று முன்னால் நின்றவனின் சத்தமான பேச்சில் அவனுடைய முகத்தை பார்த்த ஆதி, உன் பெயர் என்ன நீ என் கம்பெனில வேலை பார்க்கிறியா என கூர்மையான விழிகளால் அவனை ஆராய்ந்தபடியே கேட்க!!
பாருங்க தோழர்களே! இவங்க செய்த தப்பை சொன்னா என்னையவே வேத்து ஆளுனு முத்திரை குத்த பார்க்கிறாரு நம்ப முதலாளி என ஆதியை கைநீட்ட..
இதோ பாருங்க நம்ப கம்பெனியில் நடந்ததுக்கு யாரு காரணமோ அவங்களை போலீசில் ஹேண்ட் ஓவர் பன்னிட்டு தான் வந்துருக்கேன் என்ற ஆதியின் பேச்சை கேட்காமல், ஆதியின் குடும்பத்திற்கு எதிராக சத்தமிட்டபடியே இருக்கவும், தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு அதே நேரம் கமிஷ்னர் ஹாஸ்பிடலுக்கு வரவும் சரியாக இருந்தது.
என்னாச்சு மிஸ்டர் சித்தார்த் எனி ப்ராப்ளம் என்று கமிஷ்னர் கேட்கவும்,
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....