ஆதியால் பலமாக அடிவாங்கிய சபரீஷால் டுயூட்டியில் சேர முடியாமல் ஒரு மாதம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தான். அங்கே இருக்கும் போதே தனக்கு நெருக்கமானவர்களின் மூலமாக ஆதியைப் பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும், விசாரித்தவனால் ஆதியை நெருங்குவது மிக கடினம் என்பதை உணர்ந்தவன், தன்னை வலையில் வீழ்த்திய லல்லீயை தேடியவனுக்கு, அப்படி ஒரு பெண் இருப்பதாக எந்த ரெக்கார்டும் இல்லாமல் போக, பெருத்த அதிர்ச்சியை அடைந்தான்.
லல்லீ என்ற பெயரில் பெண்கள் பலர் இருந்தாலும், காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணை போல் உருவ அமைப்பு கொண்ட பெண் எவருமே இல்லை என்ற பதிலில், தலையே சுற்றுவது போல இருந்தது சபரீஷிற்கு. ஆதியை பழிக்கு பழி வாங்கியே தீரவேண்டும் என்ற வெறி மட்டும் அவனை விட்டு அகலவே இல்லை.
ஆதியின் மீது இருந்த கோபத்தில், அந்த பெண்ணையோ அவளுடைய குடும்பத்தையோ மறுபடியும் பழி வாங்க இயலவில்லை எங்கே அவர்களை நெருங்கினாள், தனக்கும் தன் வேலைக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயமும் இல்லாமல் இல்லை சபரீஷிற்கு, ஆகையால் ஆதியை பழிவாங்க ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு அதை போலவே, ஆதி என்ற சிங்கத்தை வேட்டையாட தகுந்த நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தவனின் கைகளில் வந்து தானாகவே விழுந்தது தான், அவனுடைய பேக்டரியில் பாய்லர் வெடித்தது.
தன்னுடைய ஒரு வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி ஆதி குடும்பத்திற்கு எதிரான உள் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தானாகவே வந்த வஜ்ரத்தை பற்றி கொண்டான்.
வஜ்ரத்தின் பின்புலத்தை எளிதில் கண்டு கொண்ட சபரீஷ், அவனோடு பணத்திற்காக கை கோர்ப்பது போலவே தன்னை காட்டிக் கொண்டவன், வஜ்ரத்திற்கு ஆதரவாகவும் ஆதிக்கு எதிரான சில சட்ட சிக்கல்களைப் பற்றி மறைமுகமாக அவனுக்கு சொல்லிக் கொடுத்து இன்று மேகநாதனை கைது செய்யும் அளவிற்கு சபரீஷ் தன்னுடைய திட்டத்தை வஜ்ரத்தின் மூலமாக செயல்படுத்தினான்.
STAI LEGGENDO
சித்தாரா
Narrativa generaleஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....