"தாரா" சேஃப்! என்ற மெசேஜ் வந்ததும், நிம்மதியான மூச்சை இட்டவள், இதற்கு மேல் தன்னால் இங்கே இருக்க முடியாது என நினைத்தவள், செல்விம்மா என்று சத்தமாக குரல் எழுப்ப... வேகமாக அவள் முன்னால் வந்து நின்றவரிடம், என்னோட பேக்கை எடுத்துக் காரில் வைங்க என்று உத்தரவிட!
அவரோ, சரி பாப்பா என்று சொன்னதுமில்லாமல் பேக்கை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, வழக்கமாக அவள் உடுத்தியிருக்கும் உடையில் இருந்து மாறுப்பட்டு ப்ளாக் கலர் ஜீன்ஸ் பேன்ட்டும் ஸ்கை புளு கலர் டாப்சும் அதற்கு மேட்சாக காதுக்கு மாடர்ன் ஸ்டெட் கைக்கு வாட்ச் ஹைஹீல்ஸ் செப்பல் என அணிந்திருந்தவளின் தோற்றத்தில் பணக்காரத்தனம் அதிகமாகவே தெரிந்தது.
செல்விமா, 'அவளுடைய' பேக்கை காரில் வைக்கவும், அதில் ஏறி அமர்ந்தவள் செல்விமா டூ டேஸ்ல வந்துடுவேன் வீட்டை பார்த்துக்கோங்க என்று உத்தரவிட, சரி பாப்பா என்று வேகமாக தலையை உருட்டினார்.
டிரைவரிடம் திரும்பியவள் அண்ணா ஏர்போர்ட் போங்க என்று கட்டளையிட! எஸ் மேடம் என்று பணிவுடன் உரைத்தவன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
சீரான வேகத்தில் கார் செல்ல கண்களை மூடி அமர்ந்திருந்தளின் மனமோ, நேற்று தன் அம்மா சொன்னவைகளையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
இரவு உணவை வேண்டாம் என்று தவிர்த்து விட்டு அறைக்குள் வந்த "விஜி" உடல் அசதி தீர குளித்து விட்டு வருவதற்குள் அவளுடைய மொபைல் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அறைமணி நேரம் கழித்தே பாத்ரூமில் இருந்து வெளியே வந்த விஜியின் காதில் மொபைல் ரிங்காகவும், அய்யோ ஆதி அண்ணாவா இருக்குமோ? என்ற யோசனையுடன் வேகமாக சென்று மொபைலை எடுக்கவும் தொடர்பு துண்டிக்கப்படவும் சரியாக இருந்தது.
வீட்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மிஸ்டுகால்ஸை பார்த்ததும், என்ன இத்தனை கால்ஸ் வந்துருக்கு நார்மலா நான் எடுக்கலனா, ஏதோ வேலையா இருப்பேன்னு தெரிந்து மறுபடியும் போன் செய்ய மாட்டாங்களே? இப்போ ஏன் இத்தனை தடவை போன் செய்துருக்காங்க... என்ற சந்தேகம் எழ மனதில் உண்டான பதற்றத்துடன் வீட்டின் நம்பரை உடனே அழுத்தினாள் விஜி.
KAMU SEDANG MEMBACA
சித்தாரா
Fiksi Umumஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....