தன்னிடம் சொல்லாமல், "அண்ணன் எங்கே சென்றார்? என யோசித்தபடி நின்றிருந்த விஜியின்" தோளில் யாரோ கையை வைக்கவும், சட்டென திரும்பியவள் தாராவை பார்த்ததும் அதிர்ந்தாள்.
என்னடி, விஜி! என்னை பார்த்ததும் இந்த முழி முழிக்கிற என தாரா கேட்கவும், சட்டென தன் முகத்தை இயல்பாக்கியவள்..
ஹேய், அதெல்லாம் ஒன்றும் இல்லடி திடிர்னு என் மேல கையை வைக்கவும், நான் யாரோ என்னமோனு ஷாக் ஆகிட்டேன்' என்றவளை பார்த்து சிரித்தாள் தாரா.
சரி! உன் அண்ணா கூட போறேனு சொன்ன என்றபடியே, சுற்றிலும் தன் பார்வையால் அவனை தேடினாள். யாரை தேடுகிறோம் ஏன் தேடுகிறோம் என்று தெரியாமலேயே தன் பார்வையை சுழற்றினாள் தாரா.
இல்லடி, அண்ணனுக்கு இம்பார்டென்ட் வொர்க் வந்துடுச்சி அதான் கிளம்பிடட்டாங்க... என்று மலுப்பலாக சொன்னாள் விஜி.
விஜி" சொன்னதை உண்மை என்று நம்பிய தாரா, சரி! உனக்கு வேற ஏதாவது வேலை இருக்கா? என கேட்க
இல்லடி, ஏன் கேட்கிற?
அப்படி எந்த வேலையும் இல்லனா எங்கூடவே வா, இன்னைக்கு ஒரு நாள் என்னோட இருடி, என்று "விஜியை" அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அதே நேரம், இங்கே காரில் பயணம் செய்து கொண்டிருந்த "சித்தார்த்தின்" உள்ளம், உலைக்களமாக கொதித்து கொண்டிருந்து. அவனின் கைகள் ஸ்டியரிங்கை லாவகமாக திருப்பும் வேகத்தில், அவனின் கோபத்தை பறைசாற்றியது... அவனுடைய மனமும் கடந்த காலத்தைப் பற்றிய சிந்தனையில் உலன்று கொண்டிருந்தது.
இரண்டு வருடத்திற்கு முன்பு
அன்று ஆதியின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. புது பெண்ணை போல் அங்காங்கே பூக்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மாளிகையின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல வண்ண வண்ண விளக்குகளால் ஜொளித்துக் கொண்டிருந்தது.
விருந்தினர்களின் வருகையில், வீடே இன்னும் அழகுற மிளிரிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வரும் நெருங்கிய சொந்தங்களை வரவேற்றப்படி மேகநாதனும் அவர் மனைவி ராஜலெட்சுமியும் புன்னகை முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....