ஏய் வினி, விஜி எப்படி இங்கே வந்தாள்? "அவளுக்கு, வேற ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லி தானே வரலனு சொன்னா! இப்போ இங்கே எப்படி?... என வினியிடம் கேட்டது போல தனக்கு தானே கேள்வியை கேட்டுக் கொண்டாள் தாரா.
எனக்கும் அதான்டி குழப்பமா இருக்கு? என்றபடியே வினியும் தாராவை தொடர்ந்து சென்றாள்.
ஹலோ விஜி, என்று தன்னை அழைக்கும் குரலில், யார் என உணர்ந்தவள் தன்னுடைய முகபாவனையை சரி செய்து கண்களில் வியப்புடன் திரும்பியவள்... தாராவையும் வினியையும் பார்த்து... ஹாய் தாரா! நீ எப்...படி இங்..கே என திக்கி திணறி கேட்டவளை இடையிட்டு வெட்டினாள் வினி.
ஏய்? இப்ப எதுக்கு இந்த திக்கு திக்குற என "வினி சந்தேகத்துடன் கேட்கவும்,
ச்சே ச்சே!! அதெல்லாம் இல்லடி, நான் எப்போ திக்கினேன் உங்களை பார்த்த ஷாக்ல தான், அப்படி வந்திருக்கும் என சொல்லிக்கொண்டே வினியின் தோலை இடிக்க...
அவள் இடித்ததில் வலி வரவும் ஏன்டி, எரும இப்படியா இடிப்ப? என கத்தவும்,
விஜி, என்றழைக்கும் ஆடவனின் குரலில் ஈர்க்கப்பட்டு, அந்த குரல் வந்த திசையை பார்த்தாள் தாரா... அங்கே நின்றவனின், முதுகுப்புறம் மட்டுமே தெரிய... அவன் முகத்தை பார்க்க முடியுமா? என நினைத்தவாறே தலையை பக்கவாட்டில் நீட்டிக் கொண்டு பார்த்தும், பார்க்க முடியாமல் போக... ஏய் என்னடி யாரோ ஒருத்தனைப் போய் பார்க்க முடியலைனு யோசிக்கிற என அவளுடைய மனசாட்சி கேள்வி கேட்கவும்...
ஹே அது ஒன்றுமில்லைப்பா அவள் அண்ணனுக்கு மேரேஜின்னு சொல்லிட்டு இருந்தா, அதனால் தான் என ஒரு காரணத்தை தனக்கு தானே கூறிக் கொண்டவளை பார்த்து கேவலமான ஒரு பார்வை பார்த்தது மனசாட்சி.
அய்யோ இந்த அண்ணனுக்கு, அறிவே கிடையாது... தாரா இங்கே வந்துருக்கா அது தெரியாமல், இன்னைக்குன்னு பார்த்து தான் இங்கே வரனுமா? என மனதுக்குள் புலம்பியவளின் தோலை உலுக்கினாள் வினி.
ESTÁS LEYENDO
சித்தாரா
Ficción Generalஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....