சித்தாரா-24
ஆதியின் கேள்விக்கு கமிஷ்னரிடம் பதில் இல்லாமல் போனது. தங்கள் டிபார்மெண்ட்டிலேயே ஏதோ ஒரு கருப்பு ஆடு மிச்சமிருப்பதாகவே, நினைத்தார். அது யாரென்று தெரியாமல் எல்லார் மீதும் எப்படி நடவடிக்கை எடுப்பது என யோசித்தபடியே இருந்தவர் ஆதியிடம், டோன்ட் வொர்ரி ஆதி வஜ்ரத்தை சீக்கிரமே அரெஸ்ட் பன்னிடுவோம், அவனை பற்றின என்கொய்ரியை கான்பிடென்சியலா நான் ஸ்டார்ட் பன்றேன் என உறுதியளித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
டேய் மச்சி கவலையே படாத கண்டிப்பா அந்த வஜ்ரம் மாட்டுவான் என அருண் சமாதானமாக சொல்லவும்,
அடப்போடா அவன் மட்டும் மாட்டியிருந்தா, இந்த ஜென்மத்துக்கு வெளிய வரவே முடியாது, சாகுற வரைக்கும் அவன் கம்பி தான் எண்ணிட்டு இருந்திருப்பான் இப்போ பாரு அடுத்து அவன் என்ன பன்ன போறானு நான் மண்டையை பிச்சிக்கிட்டு இருக்கனும், என நொந்தவன், தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு அப்பாவிடம் சென்றான்.
இரண்டு நாட்களுக்கு பிறகு தான் மேகநாதனுக்கு டிஸ்சார்ஜ் என்று டாக்டர்கள் சொல்லிவிட கூடவே சில அறிவுரைகளை வழங்கினர்.
டாக்டர்ஸ் அறிவுரைகள் படி அவர் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்து கொள்ளனும், வீட்டுக்கு போன பிறகு செஸ்ட்ல பெயின் இருந்தா உடனே ஹாஸ்பிடலுக்கு வரனும், மாதம் ஒரு முறை ஹாஸ்பிடலுக்கு வந்து உங்க ஹெல்தை செக் பன்னிக்கனும், என்று சொல்ல,
டாக்டர் ப்ளீஸ், நான் நல்லா இருக்கேன் எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை என சொல்லியவரை குடும்பத்தினர் அனைவரும் பார்த்த பார்வையில், வேறு வழியின்றி ஓகே டாக்டர் நான் ரெஸ்ட்ல இருக்கேன் என்றவர் தன் தம்பியிடம்,
டேய் சாமி இதுலாம் ரொம்ப அதிகம்டா என்னை முழு நோயாளியா மாத்திடுவிங்களோனு எனக்கு பயமா இருக்கு என்றவரை முறைத்தார் ராஜலெட்சுமி.
YOU ARE READING
சித்தாரா
General Fictionஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....