தாரா-5

665 43 52
                                    

ஹேய் சாரிடி வினி! அன்னைக்கு நான் ஏதோ யோசனையில கையில்   வச்சிருந்த புக்ல அந்த பேப்பரை வச்சிட்டேன். அந்த ஒரு லெட்டரால உனக்கு இப்படி ஒரு பிராப்ளம் வரும்னு நான் நினைக்கல, உண்மையான வருத்ததுடன் பேசிய "தாராவை பார்த்தவளுக்கு மனது கஷ்டமாக இருக்கவும்..

சரி விடுடி, தாரா" நீ என்ன வேண்டுமென்றேவா செஞ்ச! என அவளுடைய முக வாட்டத்தை தாங்க முடியாமல் வினி சொல்லவும்...

அதெப்படி வினி! உன்மேல தவறே இல்லாத போது பழி சுமத்தினா உனக்கு எந்தளவிற்கு வலிக்கும்னு எனக்கும் தெரியும்டி" இந்த உலகத்தில் உண்மையான உறவுகள் எதுவுமே இல்லடி. எல்லாருமே சுயநலவாதிகள் தான் என வெறுப்புடன் பேசினாள் தாரா.

தாராவின், பேச்சை கேட்டதும் அதிர்ந்த வினி" அவளுடைய மனதை மாற்றும் பொருட்டு... எல்லாருமே சுயநலவாதிகளா இருக்க மாட்டாங்க தாரா" உன்னோட எண்ணத்தை மாத்திக்கடி

எப்படி, டி" நேற்று வரைக்கும் உன்மேல இருந்த நம்பிக்கை ஒரு மொட்டை கடிதாசியை பார்த்தவுடனே போய்டுச்சி பார்த்தியா! இதுதான்டி உறவுகளோட உண்மையான சுயரூபம் என வெறுப்புடன் பேசிவிட்டு எழுந்து சென்றாள் தாரா.

ஒரு விதத்தில் தாரா' சொல்றது கூட சரிதானே... என் மேல நம்பிக்கை இல்லாமல் தானே, உடனே கல்யாணம் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று அவளுடைய மனம் எடுத்துறைக்க... ச்சே" திடிர்னு என் பேக்ல லெட்டரை பார்த்தவுடனே பயந்துருப்பாங்க!! அதனோடு வெளிப்பாடு தான், அம்மாவோட கோபம் சந்தேகமே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அவளின் மற்றொரு மனம் பெற்றவர்களுக்காய் பரிந்து கொண்டு வர... அய்யோ இந்த தாரா பேசியே நம்மேல குழப்பிட்டாளே! இப்ப நான் என்ன தான் பன்றது என தெரியாமல் தலையை பிய்த்து கொள்ளலாம் போல பொத்தென அமர்ந்து விட்டாள் வினி.

வினியுடன், பேசிவிட்டு வந்த பிறகு தாராவின்" மனம் ஒரு நிலையில் இல்லை... கண்ணை மூடி அமர்ந்திருந்தவளின் விழித்திரையில், ஏதோ நிழல் உருவங்களாய் பிம்பம் போல தெரிய" ஒரு உருவம் மற்றொரு உருவத்தை எட்டி உதைக்கவும், அடிவாங்கிய உருவம் சிறிது தூரம் சென்று கீழே விழுவதும்,, கீழே விழுந்து கிடந்தவரின் அருகில் அழுதபடி ஒரு சின்ன பெண் நிற்பதுமாக தெரிய வர... திடுக்கிட்டு கண்ணை திறந்தவளின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது.

 சித்தாராOpowieści tętniące życiem. Odkryj je teraz