சித்தாரா-22
தன் எதிரில் நின்றவனை உற்று நோக்கினாள் விஜி. அவன் கண்களில், தெரிந்த போலித்தன்மையை கண்டுக் கொண்டவள் எஸ் இன்ஸ்பெக்டர் என கண்களில் திமிருடன் கேட்டதும்,
தன் எதிரே நின்றவளின் கண்களில் தெரிந்த திமிரை பார்த்தவனின் மனம் கோபத்தில் கொந்தளிக்க அதை வெளியே காட்டாமால், விஜியை பார்த்து, என்ன மேடம் எஸ்னு சாதாரணமா சொல்றீங்க? உங்க பேமிலியோட சிக்சுவேஷன் என்னவென்று தெரிந்தால் இப்டி கூலா இருக்க மாட்டிங்க என பீடிகையுடன் பேச.?.
சார் ப்ளீஸ் இப்படி சுற்றி வளைத்து பேசினா எனக்கு பிடிக்காது டேரக்டா விசயத்துக்கு வந்தா நல்லா இருக்கும், விஜியின் குரலில் எரிச்சல் தெரிய பல்லை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்தினான் சபரீஷ்.
அவன் மனதில் அண்ணனும் தங்கச்சியும் ஒரே மாதிரி திமிர் பிடிச்சதுங்களா இருக்கிறீங்களாடி, உங்க திமிரை இன்னைக்கு ஒரேடியா அடக்கிடுறேன்டி" என கருவியவன், என்ன மேடம் நான் முக்கியமான விசயம்னு சொல்லியும் உங்ககிட்ட பரபரப்பே இல்லாமல் இவ்வளவு அமைதியா கேட்கிறீங்க,
அய்யோ சரியான இம்சையா இருக்கிறான், முக்கியமான விசயம்னு சொல்றானே தவிர எதைப் பற்றினு சொல்லாமல், அளந்துட்டு இருக்கான் என மனதுக்குள் புலம்பியவள், இதற்கு மேலும் தன்னால் முடியாது என நினைத்தவள் அவனை கடந்து சென்றாள்.
போயும் போயும் ஒரு பொட்டச்சிக்கு இவ்ளோ திமிரா, ஏய் உன்னை மாதிரி எத்தனை பேர நான் பார்த்திருப்பேன் அவளுங்களை இந்த நாய்,செருப்பு மாதிரி என் காலில் விழுந்து கெஞ்சி கதறினவங்களை எல்லாம் மிதிச்சி நசித்து இருக்கேன்டி, ஆனால் நீ எவ்ளோ தெனாவட்டா என்னை தான்டிட்டு போறியாடி இனிமேல் நடிச்சது போதும் என மனதுக்குள் பொங்கியவன்,
ஏய் நில்லுடி!! என்னடி திமிரா போற? உன் பெரியப்பனோட உசுர் உனக்கு முக்கியமில்லையா என்ற சபரீஷின் குரலில் சட்டென நின்றாள் விஜி.
CITEȘTI
சித்தாரா
Ficțiune generalăஎல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....